/ ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் 'வலக் கையால் உண்பீராக!' என்று சொன்னார்கள். அவர், 'என்னால் முடியாது' என்றார். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், 'உ...

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் 'வலக் கையால் உண்பீராக!' என்று சொன்னார்கள். அவர், 'என்னால் முடியாது' என்றார். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், 'உ...

ஸலமா இப்னுல் அக்வஃ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் 'வலக் கையால் உண்பீராக!' என்று சொன்னார்கள். அவர், 'என்னால் முடியாது' என்றார். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், 'உம்மால் முடியாமலே போகட்டும்!' என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் தனது இடக்கரத்தால் சாப்பிடுவதைக் கண்டு வலது கரத்தால் சாப்பிடுமாறு கட்டளைப்பிறப்பித்தார்கள். அதற்கந்த மனிதர் தனக்கு முடியாதென ஆணவத்துடனும் பொய்யாகவும் பதில் கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலது கையால் உண்பது தடுக்கப்பட வேண்டுமென பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அல்லாஹ் தனது நபியின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். அதனால் அவரின் வலது கை செயலிழந்து போனது. அதன் பிறகு அவரால் உண்பதற்கோ குடிப்பதற்கோ வாயின் அருகில் வலக்கரத்தை உயர்த்த முடியவில்லை.

Hadeeth benefits

  1. வலது கையால் உண்பது வாஜிபாகும். இடது கரத்தால் சாப்பிடுவது ஹராமாகும்.
  2. இஸ்லாமிய சட்டதிட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் ஆணவம் கொள்பவது தண்டணைக்குரிய குற்றமாகும்.
  3. தனது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிரார்த்னைக்கு பதிலளித்ததன் மூலம் நபியவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளமை.
  4. உணவு உண்ணுகின்ற நிலமை உட்பட எல்லா நிலமைகளிலும் நன்மையை ஏவி தீமையை தடுப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.