/ 'உணவு உண்டதும், அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தி புகழும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்'...

'உணவு உண்டதும், அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தி புகழும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்'...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'உணவு உண்டதும், அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தி புகழும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்'.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அடியான் உணவு உண்ட பின்னரும் பானத்தை அருந்தியதன் பின்னரும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி தனது இரட்டசகனின் அருட்கொடைக்கு நன்றி செலுத்தி புகழ்வது அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்வதற்கான வழியாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள்.

Hadeeth benefits

  1. அல்லாஹ்வின் பெருந்தன்மை அதாவது வாழவாதாரத்தின் மூலம் பெருமைப்படுத்தி அதற்கு நன்றி செலுத்துவதினால் அவன் திருப்தியடைகின்றமை.
  2. இறை திருப்தி என்பது மிகவும் சாதாரண விடயமான உண்ணல் பருகலின் பின் அல்லாஹ்வை புகழுவதின் மூலம் கிடைக்கிறது.
  3. உண்ணல் பருகுதலைத் தொடரந்து அல்லாஹ்வைப் புகழ்வது உண்ணல் பருகலின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களில் ஒன்றாகும்.