/ நாம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர் 'வருத்திக்கொண்டு காரியங்களை மேற்கொள்வதை விட்டும் நாம் தடுக்கப்பட்டோம்' என்று கூறினார்கள்...

நாம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர் 'வருத்திக்கொண்டு காரியங்களை மேற்கொள்வதை விட்டும் நாம் தடுக்கப்பட்டோம்' என்று கூறினார்கள்...

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர் 'வருத்திக்கொண்டு காரியங்களை மேற்கொள்வதை விட்டும் நாம் தடுக்கப்பட்டோம்' என்று கூறினார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

எந்தத் தேவையுமின்றி, அது சொல் அல்லது செயல் சார்ந்த விடயங்களாயினும் அவற்றை சிரமப் படுத்திக் கொண்டு மேற்கொள்வதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள் என உமர் ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள்.

Hadeeth benefits

  1. சிரமப்படுத்திக்கொண்டு செய்வதில் தடுக்கபட்டவை: தேவையில்லாமல் அதிகமாக கேள்வி கேட்டல், அல்லது தனக்கு தெரியா விடயத்தில் தன்னை வருத்திக் கொண்டு செயல்படுதல், அல்லது அல்லாஹ் தாராளமாக நடந்து கொள்வதற்கு அனுமதித்திருக்கும் விடயத்தில் எல்லை மீறி கடுமையாக நடந்து கொள்ளுதல்.
  2. ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை அவர் தன்னை உயர்வாகவும் கௌரவமாகவும் நடந்து கொள்ள பயிற்றுவிப்பதுடன் சொல் மற்றும் உண்ணுதல், பருகுதல், வார்த்தைகள் மற்றும் ஏனைய செயல் சார் நிலைகளில் தன்னை வருத்திக்கொள்வது கூடாது.
  3. இஸ்லாம் ஒர் இலகுவழி மார்க்கமாகும்.