- உண்ணல் பருகலின் போது ஆரம்பத்தில் பிஸ்மில் கூறுவது ஒழுக்கங்களின் ஒன்றாகும்.
- ஒருவரின் பராமரிப்பின் கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பித்துக் கொடுத்தல் வேண்டும்
- சிறார்களுக்கு கற்பித்து நெறிப்படுத்துவதில் நபியவர்களின் இங்கிதமும் தயாள குணமும் இந்த ஹதீஸில் பிரதிபளிக்கின்றமை.
- உண்ணும் போது தனக்கு அருகில் உள்ளதை சாப்பிடுவது ஒழுக்கங்களில் ஒன்றாகும். ஆனால் குறிப்பிட்ட உணவு பல வகையானதாக இருப்பின் அவருக்கு விரும்பியதை எப்பகுதியிலிருந்தும் எடுத்து சாப்பிட அனுமதியுண்டு.
- நபியவர்கள் கற்றுக்கொடுத்து நெறிப்படுத்திய விடயத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் பண்பு ஸஹாபாக்களிடம் காணப்பட்டமை. அதனை நாம் ' உமர் அவர்களின் கூற்றான 'அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது'. என்பதிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.