/ 'மென்மை எதில் இருக்கிறதோ, அவற்றை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்'...

'மென்மை எதில் இருக்கிறதோ, அவற்றை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்'...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அவர்களின் துணைவியார் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ளார்கள் : 'மென்மை எதில் இருக்கிறதோ, அவற்றை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்'.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் மென்மை, கனிவு, பேச்சிலும் செயலிலும் நிதானம், இங்கிதம் போன்ற பண்புகளைப் கடைப்பிடித்து ஒழுகுவது, விவகாரங்களை அழகும், முழுமையும் வசீகரமும் மிக்கதாக மாற்றி விடும் எனத் தெளிவு படுத்துகிறார்கள். இதற்கப்பாள் குறிப்பிட்ட நபர் தனது தேவையை பெற்றுக்கொள்ளவும் வழிவகுத்து விடும். நலினமற்ற வண்மத்தை கடைப்பிடிப்பாதானது விவகாரங்களை சிக்கலாக்கி அவற்றை அசிங்கமாக்கி குறிப்பிட்ட நபர் தனது தேவையை பெற்றுக்கொள்வதில் இடைஞ்சலை ஏற்படுத்தும் அவ்வாறு அவர் தனது தேவையைப் பெற்றுக் கொண்டாலும் சிரமத்துடனேயே அவர் பெற்றுக் கொள்வார்.

Hadeeth benefits

  1. மென்மை எனும் பண்பை கடைப்பிடித்தொழுகுமாறு ஆர்வமூட்டுதல்.
  2. மென்மை ஒரு மனிதனை அலங்கரிக்கிறது. அது மட்டுமல்லாது மார்க்க மற்றும் உலக விவகாரங்கள் உள்ள அனைத்து நன்மையான விடயங்களுக்கும் காரணமாக இப்பண்பு காணப்படுகின்றமை.