/ 'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக்...

'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக்...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்'.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

இந்நபிமொழியில் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய சில கடமைகள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள். அந்தக்கடமைகளுள் முதலாவது ஒருவர் உமக்கு ஸலாம் கூறினால் அவருக்கு பதிலளித்தல் ஆகும். இரண்டாவது கடமை: நோயாளியை சுகம் விசாரித்தல். மூன்றாவது கடமை: ஜனாஸாவை வீட்டிருந்து தொழுமிடம் வரைக்கும்,தொழுமிடத்திலிருந்து அவரை அடக்கம் செய்யவதற்காக மக்பரா –அடக்கஸ்தளம் வரை பின்தொடரந்து செல்லுதல். நான்காவது கடமை : ஒருவர் வலீமா,மற்றும் வலீமா அல்லாத நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தால் அதற்கு பதில்அளித்தல். ஐந்தாவது கடமை : தும்மியவருக்கு பதிலளித்தல். அதாவது தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் அதனைக் செவிமடுத்தவர் யர்ஹமுகல்லாஹ் என்று கூறவேண்டும். அதற்கு தும்மியவர் யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும் என்று கூற வேண்டும்.

Hadeeth benefits

  1. முஸ்லிம்களுக்கு மத்தியில் பேண வேண்டிய கடமைகள் தொடர்பாகவும அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவம், அன்பு போன்றவற்றை வலுப்படுத்துவதிலும் இஸ்லாத்தின் மகத்துவத்துவத்தை பறைசாட்டுதல்.