- அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம்காட்ட வேண்டும் என்பது அவசியமாகும். என்றாலும் இங்கு மனிதர்களை விசேடமாக குறிப்பிட்டிருப்பது அவர்களில் அதி கரிசனை செலுத்த வேண்டும் என்பதற்காகும்.
- அனைத்துப் படைப்பினங்களுக்கு இரக்கம் காட்டுவது அவசியமாகும், மக்கள் மீது அதிக கரிசனை எடுப்பதற்காகவே அவர்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளனர்.
- அல்லாஹ் நிகரற்ற கருணையாளன். எனவே அவன் தனது அடியார்களில் கருணைகாட்டுவோருக்கு இரக்கம் காட்டுகிறான். எனவே செயலின் தன்மைக்கேட்ப அதே கூலி கிடைக்கிறது.
- மனிதர்களுக்கு இரக்கம் காட்டுதல் என்பது அனைத்து நன்மையான விடயங்களை அவர்களுக்கு சேர்ப்பித்தல், தீங்குளை தடுத்தல் மற்றும் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல் போன்ற விடயங்களை உள்ளடக்குகிறது.