/ 'நீர் கோபப்படாதீர்'

'நீர் கோபப்படாதீர்'

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்' என ஒரு மனிதர் கூறினார். அதற்கு நபியவர்கள், 'நீர் கோபப்படாதீர்' என பதிலளித்தார்கள். அம்மனிதர் மீண்டும், மீண்டும் கேட்டார். நபியவர்கள்; 'நீர் கோபப்படாதீர்' என்றே கூறினார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

நபித்தோழர்களில் ஒருவர் அவரின் இம்மை மறுமைக்கு பயனளிக்கும் ஒரு விடயத்தை காட்டித்தருமாறு நபியவர்களிடம் வேண்டினார். அதற்கு நபியவர்கள் கோபம் கொள்ள வேண்டாம் என அறிவுரைக் கூறி கட்டளை பிரப்பித்தாரகள். இதன் கருத்து, கோபத்தை தூண்டக் கூடிய காரணிகளை தவிர்ந்திருத்தல், கோபம் ஏற்பட்டால் மனதை அடக்கி அடக்கமாக இருத்தல், கோபத்தின் காரணமாக அத்துமீறி கொலை அல்லது தாக்குதல் அல்லது ஏசுதல் போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருத்தல் போன்றவற்றை குறிக்கும். நபியவர்களிடம் வந்த மனிதர் பல தடவைகள் தனக்கு உபதேசம் செயயுமாறு வேண்டிக்ககொண்டாலும்; நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'கோபம் கொள்ளாதீர்' என்ற வார்த்தையை தவிர மேலதிகமாக எதனையும் கூறவில்லை.

Hadeeth benefits

  1. கோபம் கொள்வது மற்றும் அதன் காரணிகளை விட்டும் எச்சரிக்கப்பட்டிருத்தல். ஏனெனில் அதுதான் அனைத்து கெடுதிகளுக்கும் மூலமாகும். அதிலிருந்து தவிர்ந்து கொள்வதே அனைத்து நலவுகளுக்குமான அடிப்படையாகும்.
  2. அல்லாஹ்வுக்காக கோபம் கொள்ளுதல் என்பது கோபத்தில் விரும்பத்தக்க கோபமாகும்.அல்லாஹ்வுடைய புனிதங்கள்-தடைகள்- மீறப்படும்போது கோபம் கொள்ளுதல் இதற்கான உதாரணமாகும்.
  3. செவிமடுப்பவர் புரிந்துகொள்ளவும் அதன் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்ளவும் தேவை –அவசியம் கருதி ஒரு விடயத்தை பல தடவைகள் கூறுதல்.
  4. அறிஞரிடம் அறிவுரை கோருவதன் சிறப்பு இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை.