- பலவீனமானவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், பரஸ்பர ஒத்துழைப்பு, மற்றும் பாராமரிப்பு ஆகிய விடயங்களுக்கு இந்நபிமொழி தூண்டுகிறது.
- இபாதத் -வணக்க வழிபாடு என்பது நல்லறங்கள் அனைத்தையும் உள்ளடக்குகிறது, அவற்றில் விதவைகள் மற்றும் ஏழைகளுக்காக உழைப்பதும் அடங்குகிறது.
- இப்னு ஹுபைரா அவர்கள் பின்வரும் கருத்தை குறிப்பிடுகிறார்கள்: அல்லாஹ்; நோன்பாளி, இரவில் நின்று வணங்குபவர், இறைபாதையில் போராடும் போராளி ஆகியோரின் நன்மைகளை ஒன்றிணைத்து குறிப்பிட்டதன் கருத்தாவது, இவ்வாறு பாடுபடுபவர் விதவைகளுக்கு அவர்களின் கணவன்மார்களின் நிலையிலிருந்தும், தன்னால் உழைத்து வாழ்வதில் இயலாதவராக இருப்போருக்கு அவர்களின் நிலையிலிருந்து அதனை செய்து கொடுப்பவராக இருப்பதாகும். ஆகவே இப்பணியைச் செய்யும் அந்த நபர் தனது ஆகாரத்தின் மேலதிகமானதை செலவு செய்தோடு மாத்திரமின்றி தனது உடல் பலத்தையும் அதற்காக அவர் தர்மம் செய்வதால் அவருக்கு நோன்பு இரவு வணக்கம் ஜிஹாத் ஆகியவற்றின் நன்மைகள் கிடைப்பது பொருத்தமாகும்.