- இஸ்லாம் மார்க்கம் கருணையின் மார்க்கமாகும். அது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல் மற்றும் உயிரினங்களுக்கு நன்மை புரிதல் என்பவற்றின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
- அல்லாஹ் கருணை, இரக்கம் எனும் பண்புக்குரித்தானவன். அவன் தூய்மையானவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். தனது அடியார்களுக்கு அருளை, கருணையை வழங்குபவன்.
- செயலின் தன்மைக்கேட்ப அதே போன்ற கூலி கிடைத்தல். அந்த வகையில் இரக்கம் காட்டுவோருக்கு அல்லாஹ்வும் இரக்கம் காட்டுகிறான்.