/ 'நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர், அது உமது சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே'...

'நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர், அது உமது சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே'...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனக்கு கூறியதாக அபூதர் அல்கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர், அது உமது சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே'.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் நல்லறங்களை செய்யுமாறு தூண்டியுள்ளார்கள்.அது ஒருவரை சந்திக்கும் போது மலர்ந்த -இன்-முகத்துடன் இருப்பது போன்ற சிறிய ஒரு செயலாக இருப்பினும் சரியே என்கிறார்கள். இதன் மூலம் தனது சகோதர முஸ்லிமுக்கு அன்பு காட்டி, மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியுமென்பதால் இவ்வாறான விடயங்களை ஒரு முஸ்லிம் அற்பமாகக் கருதாது ஆர்வத்துடன் மேற்கொள்வது அவசியமாகும்.

Hadeeth benefits

  1. முஃமின்கள்; தங்களுக்கிடையே பரஸ்பரம் அன்பு பாரட்டுவதன் சிறப்பும், சந்திக்கும் போது முகமலர்சியுடன், புன்முறுவல் பூப்பதின் சிறப்பும் குறித்து இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.
  2. இந்த மார்க்கம் அனைத்தையும் உள்ளடக்கிய பூரணமான மார்க்கமாகும். முஸ்லிம்களின் நலன், ஒற்றுமையை ஏற்படுத்தும் அனைத்தையும் சட்டபூர்வமாக்கியுள்ளது.
  3. குறைவானதாக இருப்பினும் நற்செயல் ஒன்றை செய்ய தூண்டியிருத்தல்
  4. முஸ்லிம்களுக்கு மத்தியில் நற்புறவு ஏற்படவேண்டும் என்பதற்காக அவர்களின் உள்ளங்களில் சந்தோசத்தை, மகிழ்ச்சியை ஏற்படுத்துவது வரவேற்கத்தக்க விடயமாகும்.