- கோபத்தின் போது மனதை அடக்குதல் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் சிறப்பு குறித்து குறிப்பிடப்பட்டிருத்தல். இவை இஸ்லாம் ஆர்வமூட்டியுள்ள நல்லமல்களில் சிலதாகும்.
- கோபத்தின் போது மனதுடன் போராடுவது எதிரியுடன் போராடுவதை விட மிகவும் சிரமானது.
- வலிமை பற்றிய அறியாமைக் கால எண்ணக்கருவை இஸ்லாம் ஒரு தனித்துவமான முஸ்லிம் ஆளுமையை உருவாக்கும் கண்ணியமான பண்பாக மாற்றியுள்ளது. எனவே மக்களில் மிகவும் வலிமையானவர் தனது மனதை கட்டுப்படுத்தி ஆள்பவராவார்.
- தனிமனித மற்றும் சமூகவியல் ரீதியான பல தீங்குகளுக்கு கோபம் வழிவகுப்பதால் அதனை விட்டும் விலகியிருப்பது அவசியமாகும்.