- அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்வது எல்லா நன்மையான காரியங்களுக்கும் அடிப்படையாகும். அது நல்ல விடயங்களை செய்வதற்கு அடியானைத் தூண்டுகிறது.
- நாவின் விபரீதம் பற்றி எச்சரிக்கப்பட்டிருத்தல்.
- இஸ்லாம் மார்க்கம் நற்புறவினதும் தாராளத்தன்மையினதும் மார்க்கமாகும்.
- மேலே குறிப்பிடப்பட்ட பண்புகள் ஈமானின் கிளைகளாகவும், பாராட்டத்தக்க உயர்ந்த நற்குணங்களாகவும் காணப்படுகிறன.
- தேவையில்லாது அதிகம் பேசுவது வெறுக்கத்தக்க அல்லது ஹராமான விடயங்களுக்கே இட்டுச்செல்லும். நல்ல விடயங்களில் தவிர ஏனைய விடயங்களில் மௌனமாக இருப்பது பாதுகாப்பாகும்.