/ 'ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமானதாகும்.'...

'ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமானதாகும்.'...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமானதாகும்.'
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஸூறா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதியவரை அல்லாஹ் தீங்கு மற்றும் துரதிஷ்டவசமான விபத்து போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறான் என நபியவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'கபதாஹு' என்ற வாசகத்திற்கு பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு: இரவுத் தொழகைக்குப் பதிலாக இவ்விரு வசனங்களும் போதுமாகும். இரவில் ஓத வேண்டிய ஏனைய திக்ருகளுக்குப் பதிலாக இதுவொன்றே போதுமாகும். இரவுத் தொழுகையில் ஓத வேண்டிய அதி குறைந்த பட்ச அளவு இவ்விரு வசனங்களுடைய அளவாகும். குறிப்பிட்ட வார்த்தையானது மேற்கண்ட அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்கிக்கொள்ளவதற்கு வாய்ப்புண்டு.

Hadeeth benefits

  1. ஸூரா பகராவின் இறுதிப் பகுதியின் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது. ஸுறா பகராவின் இறுதிப்பகுதி என்பது 'ஆமனர்ரஸூலு' என்பதிலிருந்து ஆரம்பித்து ஸுறாவின் இறுதிவரையிலாகும்.
  2. இரவில் ஸூறா பகராவின் இறுதிப் பகுதியை ஓதியவரை கெடுதி, தீங்கு, ஷைதான் ஆகியவற்றை விட்டும் பாதுகாக்கின்றது.
  3. இரவு என்பது சூரிய அஸ்தனமத்துடன் ஆரம்பித்து பஜ்ர் -வைகறை உதயத்துடன் முடிவடைகிறது.