- வீடுகளில் அதிகமாக வணக்கவழிபாடுகளிலும் ஸுன்னத்தான தொழுகைகளிலும் ஈடுபடுவது வரவேற்கத்தக்க விடயங்களாகும்.
- ஜனாஸாத் தொழுகை தவிர்ந்த ஏனைய தொழுகைகளை அடக்கஸ்தளங்களில் தொழுவது கூடாது. ஏனெனில் அவ்வாறு தொழுவது இணைவைப்பிற்கும் குறிப்பிட்ட மனிதர்களை எல்லை மீறி மகிமைப்படுத்தவும் காரணமாக அமைந்துவிடுகிறது.
- மண்ணறைகளில் தொழுவது தடைசெய்பட்டது என்பது ஸஹாபாக்களில் அறியப்பட்ட, உறுதியான விடயமாகும். ஆகவேதான் நபியவர்களும் அதேபோன்று தொழுகை நடாத்தப்படாத மண்ணறைகளாக வீடுகளை ஆக்கிவிட வேண்டாம் எனத் தடுத்துள்ளார்கள்.