/ இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அவர்கள் அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்க...

இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அவர்கள் அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்க...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உபையி இப்னு கஃப் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (என்னிடம்), அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அவர்கள் அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? என (மீண்டும்) கேட்டார்கள். நான் அல்லாஹு லாஇலாஹ இல்லா{ஹவல் ஹய்யுல் கய்யூம் எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம் என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல் முன்திரே! என்றார்கள்
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உபை இப்னு கஃபிடம் இறைவேதத்தில் உள்ள மிகவும் மகத்தான வசனம் எது என்று கேட்டபோது அவர் பதில் அளிப்பதற்கு தயங்கினார்.பின்னர் அவர் ' அந்த வசனம் ஆயதுல் குர்ஸி ' அல்லாஹு லாஇலாக இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம் எனக் கூறினார்.இதனை நபியவர்கள் உறுதிப்படுத்தியதோடு அவரின் உள்ளம் அறிவாலும் கல்விஞானத்தாலும் நிறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி, இந்த அறிவினால் அவர் மகிழ்ச்சியடையவும் அதனை இலகுவாக்கிக் கொடுக்கவும் பிரார்த்தனை செய்தார்கள் .

Hadeeth benefits

  1. இதில் உபை இப்னு கஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குரிய மிகப்பெரும் சிறப்பாக இந்த சம்பவம் காணப்படுகின்றமை.
  2. ஆயத்துல் குர்ஸி அல்குர்ஆனின் மிகவும் மகத்தான உயரிய ஒரு வசனமாகும்.ஆகவே அதனை மனனமிடுவதோடு மட்டுமன்றி அதன் கருத்துக்களையும் சிந்தித்துணர்ந்து செயல்படுவது அவசியமாகும்.