/ 'பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக மதிப்பிற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை'

'பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக மதிப்பிற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை தொட்டு-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக மதிப்பிற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை'.

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரார்த்தனையை (துஆவை) விட அல்லாஹ்விடம் மிகவும் மதிப்பிற்குரிய விடயம் ஏதுமில்லை என இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.

Hadeeth benefits

  1. இது துஆவின் சிறப்பாகும். யார் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிகிறாரோ அவர் அவனை கண்ணிப்பத்தியவனாகவும், அவன் தன்னிறைவானவன் என்பதை அங்கீகரித்தவனாகவும் உள்ளான். எனவே ஏழையிடம் பிரார்த்தனை செய்யப்படமாட்டாது. அல்லாஹ் யாவற்றையும் செவிமடுப்பவனாவான், ஆகவே செவிடனிடம் பிரார்த்தனை செய்யப்பட மாட்டாது, அவன் வாரி வழங்கும் வள்ளல், ஆகவே கஞ்சனிடம் பிரார்த்தனை செய்யப்படமாட்டாது, அவன் கருணையாளன், ஆகவே கல்நெஞ்சம் உடையவனிடம் பிரார்த்தனை செய்யப்பட மாட்டாது. அவன் வல்லமைமிக்கவன், ஆகவே இயலாதோனிடம் பிரார்த்தை செய்யப்படமாட்டாது, அவன் நெருக்கமானவன் -தூரத்தில் உள்ளோனிடம் பிரார்த்தனை செய்யப்படமாட்டாது. இவையல்லாத அழகியதும் மகத்துவமிக்க உண்ணதமான உயர்பண்புகளைப்பெற்றவனாக அல்லாஹ் இருக்கிறான்.