/ 'எனது சமுதாயத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் ஏற்க மறுத்தோரை தவிர'

'எனது சமுதாயத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் ஏற்க மறுத்தோரை தவிர'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'எனது சமுதாயத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் ஏற்க மறுத்தோரை தவிர' என்று கூறினார்கள். அதற்கு 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர்கள்; யார்?' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்' என்று பதிலளித்தார்கள்'.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

சத்தியத்தை விட்டு விலகி, நபியவர்களின் வழிமுறையை கடைப்பிடிக்காது நடந்தோரைத் தவிர மற்ற அனைவரும் தனது சமூகத்தில் சுவர்க்கம் செல்வார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீதிஸில் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு கூறியபோது ஸஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதரே! விலகிக்கொண்டோர், அல்லது தவிர்ந்து கொண்டோர் என்பவர்கள் யார்? என வினவினார்கள். உடனே அதற்கு யார் நபியவர்களுக்கு கட்டுப்பட்டு, அவரைப் பின்பற்றி ஒழுகுகிறாரோ அவர் சுவர்க்கம் செல்வார். யார் நபிவர்களுக்கு மாறு செய்து அவர் கொண்டுவந்த மார்க்க சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாது நடக்கிறாரோ அவர் தனது தவறான செயற்பாடுகளின் காரணமாக சுவர்க்கம் நுழைவதிலிருந்து விலகிக் கொள்வார் என நபியவர்கள் பதிலளித்தார்கள்.

Hadeeth benefits

  1. நபியரவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகும். அவர்களுக்கு மாறு செயவது அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாகும்
  2. நபியவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களுக்கு மாறுசெய்வது நரகத்தைப் பெற்றுத் தரும்.
  3. இந்த சமூகத்தில் உள்ளவர்களில் இறைத்தூதருக்கு கட்டுப்படுவோருக்கான நற்செய்தி குறிப்பிடப் பட்டுள்ளமை. அதாவது அவர்களி;ல் அல்லாஹ் வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து நடக்காதோர் அனைவரும் சுவர்க்கம் செல்வர்.
  4. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது உம்மத்தின் மீது கொண்டிருந்த பாசத்தையும், அவர்களை நேர்வழிப்படுத்துவதில் அவர்களுக்கிருந்த அவாவையும் இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.