/ அவர்களில் நல்லடியான் அல்லது நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள்...

அவர்களில் நல்லடியான் அல்லது நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள்...

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் : உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அபீ ஸீனியாவில் தாம் கண்ட தேவாலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். அந்த தேவாலயம் 'மாரியா' என்று சொல்லப்படுகிறது. அதில் கண்ட உருவங்களையும் உம்மு ஸலமா (ரழி) குறிப்பிட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்'அவர்களில் நல்லடியான் அல்லது நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அவர்கள்தான்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிகவும் தீயவர்களாவர்;'என்று கூறினார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அபீ ஸீனியாவில் இருக்கும் போது அங்கு தாம் கண்ட மாரியா என்றழைக்கப்படுகின்ற தேவாலயத்தைப் பற்றியும், அதன் அலங்காரங்கள், உருவச் சிலைகளின்,படங்கள் போன்றவற்றை வியந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். உடனே நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறான படங்களை வைத்ததன் பின்னனியை விளக்கினார்கள் நீர் குறிப்பிடும் அவர்கள் தங்களுக்கு மத்தியில் வாழ்ந்த நல்லமனிதர் ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் மண்ணறையின் மீது ஒரு பள்ளியைக் கட்டி அதில் அவர்கள் தொழுவார்கள், மற்றும் இவ்வாறான சிலைகளைப் படைத்து பதித்துவிடுவார்கள். இந்த செயலானது அல்லாஹ்வுக்கு இணைவைப்பின் பால் இட்டுச்செல்வதன் காரணமாக இக்காரியத்தை செய்பவர் அல்லாஹ்விடத்தில் மிகவும் கெட்ட மனிதராக இருப்பார் எனத் தெளிவுபடுத்தினார்கள்.

Hadeeth benefits

  1. இணைவைப்பிட்கு வழிவகுக்கும்,வழிகளை தடுப்பதற்காகவும், கப்ருகள் மீது பள்ளிகளைக் கட்டுவதோ, அல்லது தொழுவதோ பள்ளிகளுக்குள்ளே மரணித்தவர்களை அடக்கம் செய்வதோ கூடாது. இவை ஹராமான விடயங்களாகும்.
  2. கப்ருகள் மீது பள்ளிகளைக் கட்டுவதும், பள்ளிகளிலே உருவச் சிலைகள் வைப்பதும் யூத, கிறிஸ்தவர்களுடைய வழிமுறையாகும். இதனைச் செய்தவர்கள் அவர்களுக்கு ஒப்பாகிவிடுகிறார்கள்
  3. உயிருள்ள பொருட்களின் உருவச் சிலைகளை எடுப்பது ஹராமாகும்.
  4. கப்ரின் மீது பள்ளி கட்டி, அதில் உருவச் சிலைகளை படைப்பவர்கள்; அல்லாஹ்வின் படைப்பினங்களில் மிகவும் தீயவர்களாவர்.
  5. இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் அனைத்து வழிகளையும் தடுப்பதன் மூலம் தவ்ஹீதின் புனிதத்துவத்தை பாதிக்கும் விடயங்களிருந்து இஸ்லாமிய ஷரீஆ, தவ்ஹீதை பரிபூரணமாக பாதுகாத்தல்.
  6. சான்றோர் விடயத்தில் எல்லைமீறிச்செல்வதானது இணைவைப்பில் வீழ்வதற்கு காரணமாக அமையும் என்பதினால் அது தடுக்கப்பட்டிருத்தல்.