- அல்குர்ஆனை கண்ணியப்படுத்தி அதனை எடுத்து நடப்பது போன்று, நபிவழியான 'ஸுன்னாவையும்' கண்ணியப்படுத்துதல் அதில் உள்ளவற்றையும் பின்பற்றி ஒழுகுதல்.
- இறைதூதருக்குக்கு கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதாகும். அவருக்கு மாறுசெய்வது-முரணாக நடப்பது, என்பது அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாகும்.
- அஸ்ஸுன்னா –நபிவழிமுறை- ஆதாரம் என்பதை உறுதிப்படுத்துவதும், ஸுன்னாவை நிராகரித்து மறுப்போறுக்கான மறுப்பாகவும் -பதிலடியாகவும்- இந்த ஹதீஸ் காணப்படுகின்றமை.
- யார் ஸுன்னாவை மறுத்து அல்குர்ஆன் மாத்திரம் போதும் என்று விதண்டாவாதம் புரிகிறாரோ அவர் அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் புறக்கணித்தவராவர். மேலும் அல்குர்ஆனை பின்பற்றுவதாக அவர் கூறும் விடயத்திலும் அவர் பொய்யராக உள்ளார் என்பதே உண்மையாகும்.
- எதிர்காலத்தில் நடக்க இருப்பவை பற்றிய நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அறிவிப்பானது –எதிர்வு- கூறலானது, நபியவர்களின் நபித்துவத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்களில் ஒன்றாகும். அவர்கள் கூறியவாரே அவை நடைபெற்றன.