/ 'யா அல்லாஹ்! எனது மண்ணறையை (சமாதியை) வணங்கப்படும் சிலையாக

'யா அல்லாஹ்! எனது மண்ணறையை (சமாதியை) வணங்கப்படும் சிலையாக

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 'யா அல்லாஹ்! எனது மண்ணறையை (சமாதியை) வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே! தமது நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ் தளங்களாக ஆக்கிக் கொண்ட கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக'.
இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது மண்ணறையை மக்கள் போற்றி வணங்கும், ஸுஜூத் செய்யும் சிலைபோல் ஆக்கிவிடாதிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தார்கள். மேலும் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தளங்களாக எடுத்துக்கொள்வது அதனை வணங்கி வழிபடவும், அவைகளில் ஆழமான நம்பிக்கை கொள்ளவும் காரணமாக அமைந்துவிடுவதால், நபி மார்களின் அடக்கஸ்தளங்களை வணக்கஸ்தளங்களாக எடுத்துக்கொள்வது இறைவனின் அருளிலிருந்து தூரமாக்கி இறைசாபத்தைப் பெற்றுத்தரும் பெரும் பாவம் என்பதை இந்த ஹதீஸில் தெரிவித்துள்ளார்கள்.

Hadeeth benefits

  1. நபிமார்கள் மற்றும் சான்றோரின் மண்ணறைகள் விடயத்தில் இஸ்லாமிய ஷரீஆ வரம்புகளை மீறிச் செல்வது, அல்லாஹ்வை அன்றி வணங்கப்படுவதாக ஆகிவிடும். ஆகவே இணைவைத்தலுக்கு இட்டுச்செல்லும் அனைத்து வழிமுறைகளிலிருந்தும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
  2. மகிமைப் படுத்துவதற்காகவும், அவ்விடங்களில் வழிபடுவதற்காகவும் மண்ணறைகளை நாடிச் செல்வது தடுக்கப்பட்ட விடயமாகும். அதிலிருப்பவர் எந்தளவு அல்லாஹ்வுக்கு நெருக்கமானவராக இருந்தாலும் சரியே.
  3. அடக்கஸ்தளங்கள் மீது பள்ளிகள் கட்டுவது ஹராமாகும்.
  4. பள்ளியாகக் கட்டப்படாவிட்டாலும் அடக்கஸ்தளங்களில் தொழுவது ஹராமாகும். ஆனால் தொழுகை நடாத்தப்படாத ஜனாஸாவிற்கு தொழுகை நடத்த அனுமதியுண்டு.