/ 'உங்களது வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், எனது சமாதியைக் கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத் என்னை வந்தடைகின்றது'...

'உங்களது வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், எனது சமாதியைக் கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத் என்னை வந்தடைகின்றது'...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'உங்களது வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், எனது சமாதியைக் கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத் என்னை வந்தடைகின்றது'.
இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

ஸுன்னத்தான தொழுகைகள் போன்ற எந்த வணக்கமுமின்றி வீடுகளை செயலிழக்கச் செய்து மண்ணறைகளைப் போன்று ஆக்க வேண்டாமென நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தடுத்துள்ளார்கள். நபியவர்களின் கப்ரை அடிக்கடி தரிசித்து, வழமையான முறையில் அந்த இடத்தில் ஒன்றுகூடுவது இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும் வழியாக அமைந்து விடும் என்பதனால் அதனைத் தடுத்தார்கள். பூமியின் எந்த இடத்திலிருந்தாலும் நபியவர்கள் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூறுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். ஏனென்றால் அருகில் இருப்பவராயினும், தூரத்தில் இருப்பவராயினும் அவர்களின் ஸலவாத்துக்கள் ஒரே மாதிரியாகவே அவருக்கு எத்திவைக்கப்படுகின்றன. ஆகையால் அவரின் மண்ணறைக்கு அடிக்கடி செல்லவேண்டி அவசியம் கிடையாது.

Hadeeth benefits

  1. அல்லாஹ்வை வணங்குவதிலிருந்து வீடுகளை பால்படுத்துவது தடுக்கப்பட்டிருத்தல்.
  2. நபியவர்களின் கப்ரை தரிசிப்பதை நோக்காகக் கொண்டு பயணம் செய்வது இங்கு தடுக்கப் பட்டிருத்தல். ஏனெனில் அவர்கள், தன்மீது ஸலவாத் சொல்லுமாறு கட்டளையிட்டதோடு அது தன்னை வந்தடைவதாகவும் அறிவித்துள்ளார்கள். ஆனால் நபியவர்களின் பள்ளியை தரிசிக்கும் நோக்கிலும் அதில் தொழும் எண்ணத்திலும் பயணம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.
  3. குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட முறையில் அடிக்கடி நபியவர்களின் கப்ரை தரிசிப்பதன் மூலம் அதனை விழாக் கொண்டாடும் தளமாக எடுத்துக் கொள்வது ஹராமாக்கப்பட்டிருத்தல்.
  4. எல்லா காலங்களிலும் இடங்களிலும் ஸலவாத்தும் ஸலாமும் கூறுவதற்கான ஷரீஆ அங்கீகாரமானது நபியவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மிகப்பெரும் மதிப்பாகும்.
  5. மண்ணறைகளுக்குப் பக்கத்தில் தொழுவது தடை என்ற விடயம் ஸஹாபாக்களிடத்தில் ஆழமாகபதிந்த விடயமாக காணப்பட்டது. இதனால் வீடுகளை தொழாத மண்ணறைகளாக ஆக்க வேண்டாம் எனத் தடுத்தார்கள்.