/ 'உங்களில் ஒருவருக்கு தனது பெற்றோர்; தனது குழந்தை, ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் அதிக நேசத்திற்குரியவராக ஆகும்வரையில் அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'...

'உங்களில் ஒருவருக்கு தனது பெற்றோர்; தனது குழந்தை, ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் அதிக நேசத்திற்குரியவராக ஆகும்வரையில் அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'உங்களில் ஒருவருக்கு தனது பெற்றோர்; தனது குழந்தை, ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் அதிக நேசத்திற்குரியவராக ஆகும்வரையில் அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஒரு முஸ்லிம் தனது பிள்ளை, தந்தை, மற்றும் அனைத்து மனிதர்களுடனான நேசத்தை விட தன் மீதான நேசத்தை முற்படுத்தும் வரையில் அவனுடைய ஈமான் பூரணமடைய மாட்டாது, என இந் நபிமொழியில் நபியவர்கள் எமக்கு அறியத்தருகிறார்கள்.

Hadeeth benefits

  1. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நேசிப்பதும், ஏனைய அனைத்து நேசங்களை விட அவர்களுடனான நேசத்தை முற்படுத்துவதும் கட்டாயக் கடமையாகும்.
  2. உயிர், பொருள் அனைத்தையும் இறைத்தூதருக்கு அர்ப்பணித்து அவர்களின் வழிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குவது பூரணமான நேசத்தின் அடையாளங்களில் சிலதாகும்.
  3. ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நேசம் கொள்வது என்பது அவர்களின் மார்க்க ஏவல்களை எடுத்தும், விலக்கல்களைத் தவிர்ந்தும் நடப்பதோடு அவர்கள் அறிவித்து தந்தவற்றை உண்மைப்படுத்துவதும் அவர்கள் விலகி நடக்குமாறு கூறியவற்றை தடுத்தும் நடந்து கொள்வதுடன் அவர்களை முழுமையாகப் பின்பன்றி ஒழுகி, அவர்கள் மார்க்கம் எனக் காட்டடித்தராத நூதன செயற்பாடுகளை விட்டு விடுவதையும் வேண்டி நிற்கிறது.
  4. அனைத்து மனிர்களை விடவும் நபியவர்களுக்கு செலுத்த வேண்டிய உரிமையானது மிகவும் வலியுறுத்தப்பட்டதும் உண்ணதமானதுமாகும். காரணம் அவர்களே எம்மை வழிகேட்டிலிருந்து பாதுகாத்து நாம் நேர்வழி பெறவும் நரகத்திலிருந்து எம்மை காத்து சுவர்க்கம் செல்லவும் காரணமாக இருந்தார்கள்.