- நபிமார்கள், நல்லடியார்களின் சமாதிகளை அல்லாஹ்வைத் தொழும் மஸ்ஜித்களாக ஆக்குவது தடை செய்யப்பட்டதாகும். ஏனெனில் அது இணைவைப்பிற்கு இட்டுச் செல்லக் கூடியதாகும்.
- ஓரிறைக் கொள்கை மீதான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தீவிர ஆர்வமும், கரிசனையும் வெளிப்படுவதுடன் தனது மண்ணறையானது அளவு கடந்து மகிமைப்படுத்தப்படுவது பற்றிய அவர்களது அச்சமும் இங்கு வெளிப்படுகிறது. ஏனெனில் அதுவும் இணைவைப்பிற்கு இட்டுச் செல்லக் கூடியதாகும்.
- மண்ணறைகளை கட்டுதல், அவற்றை பள்ளிகளாக ஆக்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடும் யூத, கிறிஸ்தவர்கள், அவர்களைப் போன்று செயற்படுபவர்களை சபிப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.
- கப்ருகள் மீது சமாதிகள் கட்டுவது யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறையாகும். இந்த ஹதீஸ் அவர்களுக்கு ஒப்பாக நடப்பதை தடைசெய்கிறது.
- குறித்த மண்ணறை கட்டப்படாவிட்டாலும் கப்ருக்கு பக்கத்தில் தொழுவது அல்லது அதனை நோக்கி தொழுகையில் ஈடுபடுவதும் மண்ணறைகளை பள்ளிவாயில்களாக எடுத்துக்கொள்வதில் உள்ளடங்குகின்றது.