ஒரு அடியான் பாவமொன்றை செய்து விட்டு அழகிய முறையில் வுழூசெய்து பின் எழுந்து தனது பாவத்திலிருந்திருந்து மீளும் நோக்கில் இரண்டு ரக்அத்துக்களை தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அவனை அல்லாஹ் மன்னிக்காது விட்டுவிடுவதில்லை...
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை செவியேற்றால், அல்லாஹ் எனக்கு எவ்வளவு நன்மை விளைவிக்கிறானோ அந்த அளவிற்கு அதன் மூலம் நான் பயனடைகிறேன்;. நபித் தோழர்களில் ஒருவர் என்னிடம் ஹதீஸ்களைக் கூறினால், நான் அவரிடம் சத்தியம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், அவர் சத்தியம் செய்தால், நான் அவரை நம்புகிறேன். பின்வரும் இந்த ஹதீஸை அபூபக்கர் கூறினார்- அபூபக்கர் உண்மையைச் சொன்னார்; அவர் தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுவதை நான் கேட்டேன், என்று கூறினார்: ஒரு அடியான் பாவமொன்றை செய்து விட்டு அழகிய முறையில் வுழூசெய்து பின் எழுந்து தனது பாவத்திலிருந்திருந்து மீளும் நோக்கில் இரண்டு ரக்அத்துக்களை தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அவனை அல்லாஹ் மன்னிக்காது விட்டுவிடுவதில்லை பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆல இம்ரானின் 135 வசனத்தை ஓதிக்காட்டினார்கள் "மேலும் அவர்கள் மானக்கேடான காரியத்தை செய்துவிட்டாலோ அல்லாது தங்களுக்கு தாங்களே அநியாயம் இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உடனே தங்ளது பாவங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள்".
விளக்கம்
ஒரு அடியான் பாவமொன்றை செய்து விட்டு அழகிய முறையில் வுழூசெய்து பின் எழுந்து தனது பாவத்திலிருந்திருந்து மீளும் நோக்கில் இரண்டு ரக்அத்துக்களை தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அவனை அல்லாஹ் மன்னிக்காது விட்டுவிடுவதில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்; (மேலும் அவர்கள் மானக்கேடான காரியத்தை செய்துவிட்டாலோ அல்லாது தங்களுக்கு தாங்களே அநியாயம் இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உடனே தங்களது பாவங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள் .பாவத்தை மன்னிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார்தான் இருக்க முடியும்.அவர்கள் அறிந்து கொண்டே பாவங்களில் -தவறில் நிலைத்திருக்கமாட்டார்கள்). (ஆல இம்ரான் : 135).