- தவக்குலின் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருத்தல், வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்வதில் பிரதான காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.
- தவக்குல்-அல்லாஹ்வில் முழுமையாக நம்பிக்கை வைத்து பொறுப்புச்சாட்டுவதானது- காரணிகளை-தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் ஒரு போதும் முரண்படமாட்டாது, ஏனெனில் உண்மையான தவக்குல் காலை, மாலையில் வாழ்வாதாரத்தை தேடிச்செல்வதற்கு முரண்பட மாட்டாது என்பதை இந்நபிமொழி தெளிவாகக் குறிப்பிடுகிறது.
- தவக்குலும் உள்ளம் சார்ந்த அமலாக இருப்பதால்உள்ளம் சார்ந்த அமல்களுக்கு ஷரீஆ –மார்க்கம்- முக்கியத்துவம் அளித்துள்ளதை காண முடிகிறது.
- அல்லாஹ்வின் மீது பொறுப்புக்களை ஒப்படைக்காது வெறுமனே காரணிகளில் -வழிமுறைகளில் மாத்திரம் தங்கியிருப்பது மார்க்க ரீதியாக அவனில் காணப்படும் ஒரு குறையாகும் . அதே போன்று காரணிகள் எதையும் செய்யாது விட்டுவது பகுத்தறிவில்-புத்தியில்- உள்ள ஒரு கோளாராகும்.