- அக்கிரமத்தில் ஈடுபடும் புத்தியுள்ள ஒருவன் தன்னை திருத்திக்கொள்வதற்கு தௌபாவின் -பாவமீட்சியின்- பக்கம் விரைய வேண்டும். ஏனெனில் அக்கிரமம் செய்பவன் தனது அக்கிரமத்தில் தொடர்ந்தும் இருக்கையில் அல்லாஹ்வின் சூழ்ச்சியில்-தண்டனையில்- ஒரு போதும் அச்சமற்றிருக்க முடியாது. அது எப்போது நிகழும் என்பதை அவனால் எதிரபார்க்க முடியாது .
- அநியாயக்காரர்களுக்கு அவகாசம் அளித்து, அவர்களை அவசரமாக தண்டிக்காது இருப்பது, அவர்கள் அறியாத விதத்தில் கட்டம் கட்டமாக தண்டிப்பதற்கும் அவர்களின்; பாவத்தை உணர்ந்து தௌபா செய்யவில்லையெனில், அதற்கான தண்டனையையும் பன்மடங்காக்குவதற்குமாகும்.
- அநியாயம் சமூகங்கள் தண்டிக்கப்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகும்.
- அல்லாஹ் அநியாயத்தின் காரணமாக ஒரு கிராமத்தை அழித்திருப்பான், அதில் நல்லோர்களும் இருந்திருப்பர். ஆனால் அவர்கள் மரணிக்கும் போது எந்த நிலமையில் இருந்தார்களோ அதே நிலமையில் மறுமையில் எழுப்பாட்டப்படுவரார்கள் அந்த தண்டனை அவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.