- மனிதன் எவ்வளவு பாவங்கள் செய்தபோதிலும் அதற்காக அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் தவ்பா செய்கிற போது அதனை ஏற்று அங்கீகரிக்கிறான். இது அல்லாஹ் தனது அடியார்களுடன் கொண்டுள்ள கருணையின் விசாலத்தை எடுத்துக் காட்டப்படுகிறது.
- அல்லாஹ்வை விசுவாசிக்கும் அடியான் தனது இரட்சகனின் மன்னிப்பை ஆதரவு வைப்பவனாகவும், அவனின் தண்டனைக்குப் பயந்தவனாகவும் இருப்பான். ஆகையால் இறைமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு விரைவதோடு அப்பாவகாரியத்தில் தொடர்ந்தும் இருக்கமாட்டான்.
- உண்மையான தவ்பாவின் நிபந்தனைகள் : பாவத்திலிருந்து முற்றும் முழுதாக விலகிக்கொள்ளுதல், அதற்காக வருந்துதல், மீண்டும் அப்பவாத்தின் பால் செல்விதில்லை என சபதம் கொள்ளுதல், குறிப்பிட்ட பாவமானது அடியார்களுடன் -மனிதர்களுடன் தொடர்பான செல்வம், மானம், உயிர் போன்ற விடயங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் நான்காவது நிபந்தனையாக குறிப்பிட்ட மனிதரிடம் மன்னிப்புக் கோரியோ அல்லது அவரது உரித்தை வழங்குவதன் மூலமோ தன்னை விடுவித்துக்கொள்ளல்.
- அல்லாஹ்வைப் பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் பிரதிபளிக்கிறது. காரணம் ஒரு அடியான் மார்க்க விவகாரங்கள் பற்றி அறிந்தவனாக இருப்பது அவன் தவறு செய்யும் போதெல்லாம் நிராசை அடையாது, அதே தவறில் தொடர்ந்தும் இருக்காது அல்லாஹ்விடம் தவ்பா கோர அவனை நிர்ப்பந்தித்து விடுகிறது.