- இந்த ஹதீஸ் அல்லாஹ் கூறியதாத நபி ஸல்லல்லாஹு அவர்கள் அறிவிக்கும் நபி மொழியாகும். இவ்வாறான ஹதீஸ்கள் 'ஹதீஸ் குத்ஸீ' (புனிதமிக்க நபிமொழி), 'ஹதீஸ் இலாஹீ' (தெய்வீக நபிமொழி) எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. இவ்வாறான ஹதீஸ்களின் வார்த்தையும் கருத்தும் அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும். என்றாலும் அல்குர்னுக்குரிய தனித்துவங்கள் இதற்குக் கிடையாது. அதாவது அல்குர்ஆன் பெற்றுள்ள தனித்துவங்களான ஓதுவது வணக்கம், ஓதுவதற்கு வுழு செய்து கொள்ளுதல் (விரும்பத்தக்கது), சவால் விடுதல், அற்புதம் போன்றவை இவ்வகையான ஹதீஸ்களுக்கு கிடையாது.
- அடியார்கள் பெற்றுக் கொள்ளும் அறிவு, நேர்வழி அனைத்தும் அல்லாஹ் கற்பித்து, வழிகாட்டியதன் மூலமே பெறுகின்றனர்.
- ஒரு அடியானுக்கு என்ன நன்மை ஏற்படுகிறதோ அது எல்லாம் வல்ல இறைவனின் கிருபையினால் உண்டாகிறது, அவனுக்கு கிடைக்கின்ற எந்தக் கெடுதியாயினும் அவனது மனோ இச்சையினாலாகும்.
- எவர் நன்மை செய்கிறாரோ, அது இறைவனின் அருளால் கிடைக்கும், அவருக்குரிய வெகுமதி இறைவனின் அருட்கொடை, புகழ் அவருக்குரியது, தீமை செய்பவர் தன்னைத் தவிர வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.