- இஸ்லாத்தின் மேன்மையும் சிறப்பும் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப் படுவதோடு, இஸ்லாத்தை ஏற்கமுன் செய்த பாவங்களை இஸ்லாம் அழித்து விடுகிறது என்ற நன்மாராயமும் உள்ளடங்கியுள்ளது.
- தனது அடியார்களுடனான கருணை, மற்றும் மன்னிப்பின் எல்லையற்ற தன்மையை பிரதிபலிக்கின்றமை.
- இணைவைப்பு,நியாயமான காரணமின்றி ஒரு உயிரைக் கொல்லுதல்,விபச்சாரம் செய்தல் போன்றன ஹராமாக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான பாவங்களைச் செய்வோருக்கான எச்சரிக்கையையும் இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது.
- உளத்தூய்மை மற்றும் நல்ல அமல்களுடன் இணைந்த தூய்மையான தவ்பாவானது அல்லாஹ்வை நிராகரித்தல் முதலான பெரும்பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுகிறது.
- அல்லாஹ்வின் அருளில் அவநம்பிக்கை கொள்ளுதல், நிராசையடையதல் போன்றன ஹராமாகும்.