{நிச்சயமாக ஸஃபா, மர்வா (மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை ஆகும். ஆகவே, கஅபாவை ஹஜ் அல்லது உம்ரா செய்பவர் அவ்விரண்டையும் சுற்றி வருவது (அவருக்கு நன்மையாகும். அது) அவர் மீது அறவே குற்றமில்லை. இன்னும், எவர் நன்மையை உபரியாகச் செய்வாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றி பாராட்டுபவன், நன்கறிந்தவன் ஆவான்.} (ஸூரா பகரா
: 158).
۞ إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِۖ فَمَنۡ حَجَّ ٱلۡبَيۡتَ أَوِ ٱعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيۡهِ أَن يَطَّوَّفَ بِهِمَاۚ وَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
{இன்னும், நீங்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக முழுமையாக்குங்கள். நீங்கள் (மக்காவிற்கு யாத்திரை செல்லும்போது வழியில்) தடுக்கப்பட்டால் (உங்களுக்கு) இலகுவாகக் கிடைக்கின்ற ஒரு பிராணியை பலி கொடுங்கள். அந்த பலிப் பிராணி தன் இடத்தை அடையும் வரை உங்கள் தலை(முடி)களை சிரைக்காதீர்கள். ஆக, உங்களில் எவர் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது அவருடைய தலையில் அவருக்கு (பேன் அல்லது காயம் போன்ற சிரமம் தரும்) இடையூறு இருந்து, அதனால் அவர் தனது தலையை சிரைத்துவிடுவாரோ அவர் நோன்பு வைத்து; அல்லது, தர்மம் கொடுத்து; அல்லது, பலிப் பிராணியை அறுத்து பரிகாரம் செய்யவும். நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் எவர் உம்ரா செய்துவிட்டு (இஹ்ராமிலிருந்து வெளியேறி) ஹஜ்ஜு(க்கும் இஹ்ராம் கட்டுகின்ற) வரை சுகம் அனுபவிப்பாரோ (அவர் தனக்கு) இலகுவான பலிப் பிராணியை அறுக்கவும். எவர் (பலிப் பிராணியை) பெறவில்லையோ, அவர் ஹஜ்ஜில் மூன்று நாட்களும் நீங்கள் (ஹஜ் முடித்து) திரும்பிய பின் ஏழு நாட்களும் நோன்பு வைக்க வேண்டும். அவை முழுமையான பத்து நாட்களாகும். (ஹஜ் தமத்துஃ செய்கின்ற அனுமதியாகிய) அது எவருடைய குடும்பம் அல் மஸ்ஜிதுல் ஹராமில் (-மக்காவில்) வசிப்பவர்களாக இருக்கவில்லையோ அவருக்குத்தான். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.} (ஸூரா பகரா
: 196).
وَأَتِمُّواْ ٱلۡحَجَّ وَٱلۡعُمۡرَةَ لِلَّهِۚ فَإِنۡ أُحۡصِرۡتُمۡ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۖ وَلَا تَحۡلِقُواْ رُءُوسَكُمۡ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡهَدۡيُ مَحِلَّهُۥۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ بِهِۦٓ أَذٗى مِّن رَّأۡسِهِۦ فَفِدۡيَةٞ مِّن صِيَامٍ أَوۡ صَدَقَةٍ أَوۡ نُسُكٖۚ فَإِذَآ أَمِنتُمۡ فَمَن تَمَتَّعَ بِٱلۡعُمۡرَةِ إِلَى ٱلۡحَجِّ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۚ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖ فِي ٱلۡحَجِّ وَسَبۡعَةٍ إِذَا رَجَعۡتُمۡۗ تِلۡكَ عَشَرَةٞ كَامِلَةٞۗ ذَٰلِكَ لِمَن لَّمۡ يَكُنۡ أَهۡلُهُۥ حَاضِرِي ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
{ஹஜ்ஜு(க்காக இஹ்ராம் கட்ட வேண்டிய காலம் ஷவ்வால், துல் கஅதா, துல் ஹஜ்ஜுடைய முதல் பத்து நாட்கள் ஆகிய) அறியப்பட்ட மாதங்களாகும். ஆகவே, அவற்றில் எவர் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கினாரோ அவர் ஹஜ்ஜில் (இஹ்ராமில் இருக்கும்போது) தாம்பத்திய உறவு அறவே செய்யக் கூடாது; தீச்சொல் பேசுதல் அறவே கூடாது; தர்க்கம் செய்வது அறவே கூடாது. நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிவான். (பயணத்திற்கு தேவையான உணவு தானியம், பொருளாதாரம் போன்ற) கட்டுச் சாதத்தை (உங்களுடன்) எடுத்துக் கொள்ளுங்கள். ஆக, நிச்சயமாகக் கட்டுச் சாதத்தில் மிகச் சிறந்தது தக்வா - அல்லாஹ்வின் அச்சம்தான். இன்னும். நிறைவான அறிவுடையவர்களே! நீங்கள் என்னை அஞ்சுங்கள்.} (ஸூரா பகரா
: 197).
ٱلۡحَجُّ أَشۡهُرٞ مَّعۡلُومَٰتٞۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي ٱلۡحَجِّۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيۡرَ ٱلزَّادِ ٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُونِ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ
{நீங்கள் (ஹஜ்ஜில் வியாபாரம் செய்து) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை. ஆக, நீங்கள் அரஃபாவிலிருந்து புறப்பட்டால் ‘அல் மஷ்அருல் ஹராம்’ அருகில் (முஸ்தலிஃபாவில் தங்கி) அல்லாஹ்வை நினைவு கூருங்கள். இன்னும், அவன் உங்களை நேர்வழி நடத்தியதற்காக (தக்பீர் கூறி) அவனை நினைவு கூருங்கள். நிச்சயமாக இதற்கு முன்னர் நீங்கள் வழி தவறியவர்களில் இருந்தீர்கள்.} (ஸூரா பகரா
: 198).
لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَبۡتَغُواْ فَضۡلٗا مِّن رَّبِّكُمۡۚ فَإِذَآ أَفَضۡتُم مِّنۡ عَرَفَٰتٖ فَٱذۡكُرُواْ ٱللَّهَ عِندَ ٱلۡمَشۡعَرِ ٱلۡحَرَامِۖ وَٱذۡكُرُوهُ كَمَا هَدَىٰكُمۡ وَإِن كُنتُم مِّن قَبۡلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ
{பிறகு, (அரஃபாவில் தங்கிவிட்டு) மக்கள் புறப்படுகிற (அந்த) இடத்திலிருந்து புறப்படுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.} (ஸூரா பகரா
: 199).
ثُمَّ أَفِيضُواْ مِنۡ حَيۡثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
{ஆக, நீங்கள் உங்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (மினாவில் தங்கி இருக்கும் நாட்களில் இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்தமிட்டுப் பெருமையாக) நினைவு கூர்ந்ததைப் போல அல்லது (அதைவிட) அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள். ஆக, “எங்கள் இறைவா! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையில் தா!’’ என்று கூறுபவரும் மக்களில் உண்டு. ஆனால், அவருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமுமில்லை.} (ஸூரா பகரா
: 200).
فَإِذَا قَضَيۡتُم مَّنَٰسِكَكُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَذِكۡرِكُمۡ ءَابَآءَكُمۡ أَوۡ أَشَدَّ ذِكۡرٗاۗ فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا وَمَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖ
{இன்னும், “எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்தும் எங்களைப் பாதுகாத்துக்கொள்’’ என்று கூறுபவரும் அவர்களில் உண்டு.} (ஸூரா பகரா
: 201).
وَمِنۡهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ
{அவர்கள் செய்த(ஹஜ் வணக்கத்)திலிருந்து அவர்களுக்கு (நன்மையில் பெரும்) பங்கு உண்டு. அல்லாஹ் (அடியார்களின் அமல்களை) கணக்கிடுவதில் (இன்னும், அவர்களை விசாரணை செய்வதில்) மிக விரைவானவன் ஆவான்.} (ஸூரா பகரா
: 202).
أُوْلَٰٓئِكَ لَهُمۡ نَصِيبٞ مِّمَّا كَسَبُواْۚ وَٱللَّهُ سَرِيعُ ٱلۡحِسَابِ
{இன்னும், எண்ணப்பட்ட (11, 12, 13 ஆகிய) நாள்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். ஆக, எவர் இரண்டு நாள்களில் (ஊர் திரும்ப வேண்டும் என்று) அவசரப்பட்டாரோ அவர் மீது அறவே குற்றமில்லை. இன்னும், எவர் (மூன்றாவது நாளும் மினாவில் தங்குவதற்காக) தாமதித்தாரோ அவர் மீதும் அறவே குற்றமில்லை. (அதாவது,) அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு (அவர்கள் இந்த இரண்டில் எதை செய்தாலும் அவர்கள் மீது குற்றமில்லை). அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக நீங்கள் (மறுமையில்) அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.} (ஸூரா பகரா
: 203).
۞ وَٱذۡكُرُواْ ٱللَّهَ فِيٓ أَيَّامٖ مَّعۡدُودَٰتٖۚ فَمَن تَعَجَّلَ فِي يَوۡمَيۡنِ فَلَآ إِثۡمَ عَلَيۡهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۖ لِمَنِ ٱتَّقَىٰۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ إِلَيۡهِ تُحۡشَرُونَ
{நிச்சயமாக மக்களுக்கு அமைக்கப்பட்ட முதல் இல்லம், (மக்கா என்றழைக்கப்படும்) ‘பக்கா’வில் உள்ளதாகும். அது பாக்கியமிக்கதும் (அதிகமான நன்மைகளை உடையதும்) அகிலத்தார்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் இருக்கிறது.} (ஸூரா ஆல இம்ரான்
: 96).
إِنَّ أَوَّلَ بَيۡتٖ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكٗا وَهُدٗى لِّلۡعَٰلَمِينَ
{அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (அவற்றில் ஒன்று,) இப்ராஹீம் நின்ற இடம். இன்னும், எவர் அ(ந்த இறை ஆலயத்)தில் நுழைகிறாரோ அவர் அச்சமற்றவராக ஆகிவிடுவார். அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்தை ஹஜ் செய்வது அங்கே சென்றுவர சக்தி பெற்ற மக்கள் மீது கடமையாகும். எவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் ஆவான்.} (ஸூரா ஆல இம்ரான்
: 97).
فِيهِ ءَايَٰتُۢ بَيِّنَٰتٞ مَّقَامُ إِبۡرَٰهِيمَۖ وَمَن دَخَلَهُۥ كَانَ ءَامِنٗاۗ وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلۡبَيۡتِ مَنِ ٱسۡتَطَاعَ إِلَيۡهِ سَبِيلٗاۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ
{நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்களுக்குள் செய்த) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு (மூன்றாவது வசனத்தில்) ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. நீங்களோ இஹ்ராமுடையவர்களாக இருக்கும் நிலையில் வேட்டையாடுவதை ஆகுமாக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்புவதை (உங்களுக்கு) சட்டமாக்குகிறான்.} (ஸூரா மாஇதா
: 1).
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَوۡفُواْ بِٱلۡعُقُودِۚ أُحِلَّتۡ لَكُم بَهِيمَةُ ٱلۡأَنۡعَٰمِ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡ غَيۡرَ مُحِلِّي ٱلصَّيۡدِ وَأَنتُمۡ حُرُمٌۗ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ مَا يُرِيدُ