புனித குர்ஆன்

Share

{நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் புனித அடையாளங்களையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) குர்பானியையும், மாலையிடப்பட்ட குர்பானிகளையும், தங்கள் இறைவனிடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடியவர்களாக புனிதமான (கஅபா) ஆலயத்தை நாடி வருகின்றவர்களையும் (அவமதிப்பதை) ஆகுமாக்காதீர்கள். இன்னும், நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால் நீங்கள் வேட்டையாடுங்கள்! (அது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது.) புனிதமான மஸ்ஜிதைவிட்டு அவர்கள் உங்களைத் தடுத்த காரணத்தால் (அந்த) சமுதாயத்தின் (மீது உங்களுக்கு ஏற்பட்ட) துவேஷம் (வெறுப்பு, பகைமை) நீங்கள் (அவர்கள் மீது) எல்லை மீறி நடக்க உங்களைத் தூண்ட வேண்டாம். இன்னும், நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். இன்னும், பாவத்திற்கும் அநியாயத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன்.} (ஸூரா மாஇதா : 2).
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُحِلُّواْ شَعَٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَلَا ٱلۡهَدۡيَ وَلَا ٱلۡقَلَٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ يَبۡتَغُونَ فَضۡلٗا مِّن رَّبِّهِمۡ وَرِضۡوَٰنٗاۚ وَإِذَا حَلَلۡتُمۡ فَٱصۡطَادُواْۚ وَلَا يَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ أَن صَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ أَن تَعۡتَدُواْۘ وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
{நம்பிக்கையாளர்களே! மறைவில் தன்னை யார் பயப்படுகிறார் என்பதை அல்லாஹ் (வெளிப்படையாக) அறிவதற்காக (நீங்கள் இஹ்ராமில் இருக்கும் போது) வேட்டைகளில் உங்கள் கரங்களும், உங்கள் ஈட்டிகளும் அடைந்து விடுகின்ற (அளவிற்கு சமீபமாக இருக்கும்) சில வேட்டைகளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்பு எவர் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினாரோ துன்புறுத்தும் தண்டனை அவருக்கு உண்டு.} (ஸூரா மாஇதா : 94).
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَيَبۡلُوَنَّكُمُ ٱللَّهُ بِشَيۡءٖ مِّنَ ٱلصَّيۡدِ تَنَالُهُۥٓ أَيۡدِيكُمۡ وَرِمَاحُكُمۡ لِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَخَافُهُۥ بِٱلۡغَيۡبِۚ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ
{நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமு*டையவர்களாக இருக்கும்போது வேட்டை(ப் பிராணி)களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவர் அதை வேண்டுமென்றே கொன்றாரோ அவர் தான் கொன்ற வேட்டைப் பிராணிக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலிருந்து எது ஒப்பானதாக இருக்கிறதோ அ(தை பரிகாரமாக அறுத்து குர்பானி கொடுப்பது அவர)து தண்டனையாகும். உங்களில் நேர்மையான இருவர் அதற்கு (-வேட்டையாடப்பட்ட பிராணிக்கு எது சரியாக ஒப்பானதாக இருக்கிறது என்பதற்கு) தீர்ப்பளிப்பார்கள். கஅபாவை அடைகிற பலியாக (-புனித ஹரம் எல்லையை அடைந்து அங்கு அறுக்கப்பட வேண்டும்). அல்லது (அதன் மதிப்பின் அளவிற்கு) ஏழைகளுக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லது (உணவளிக்க வசதியில்லாதவன்) அதற்குச் சமமான எண்ணிக்கை நோன்பு (நோற்க வேண்டும்). இது அவன் தன் செயலின் கெட்ட முடிவை அனுபவிப்பதற்காக (உள்ள பரிகாரம்) ஆகும். முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். எவர் (குற்றத்தின் பக்கம்) மீண்டாரோ அல்லாஹ் அவரை தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன் ஆவான்.} (ஸூரா மாஇதா : 95).
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقۡتُلُواْ ٱلصَّيۡدَ وَأَنتُمۡ حُرُمٞۚ وَمَن قَتَلَهُۥ مِنكُم مُّتَعَمِّدٗا فَجَزَآءٞ مِّثۡلُ مَا قَتَلَ مِنَ ٱلنَّعَمِ يَحۡكُمُ بِهِۦ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ هَدۡيَۢا بَٰلِغَ ٱلۡكَعۡبَةِ أَوۡ كَفَّٰرَةٞ طَعَامُ مَسَٰكِينَ أَوۡ عَدۡلُ ذَٰلِكَ صِيَامٗا لِّيَذُوقَ وَبَالَ أَمۡرِهِۦۗ عَفَا ٱللَّهُ عَمَّا سَلَفَۚ وَمَنۡ عَادَ فَيَنتَقِمُ ٱللَّهُ مِنۡهُۚ وَٱللَّهُ عَزِيزٞ ذُو ٱنتِقَامٍ
{(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதை புசிப்பதும் (இஹ்ராமிலுள்ள) உங்களுக்கும் (மற்ற) பயணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (எனினும்,) நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போதெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவன் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.} (ஸூரா மாஇதா : 96).
أُحِلَّ لَكُمۡ صَيۡدُ ٱلۡبَحۡرِ وَطَعَامُهُۥ مَتَٰعٗا لَّكُمۡ وَلِلسَّيَّارَةِۖ وَحُرِّمَ عَلَيۡكُمۡ صَيۡدُ ٱلۡبَرِّ مَا دُمۡتُمۡ حُرُمٗاۗ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ
{புனித வீடாகிய கஅபாவை மக்களுக்கு பாதுகாப்பாக அல்லாஹ் ஆக்கினான். இன்னும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) பலியையும், மாலை (இடப்பட்ட பலி)களையும் அல்லாஹ் ஏற்படுத்தினான். அ(வ்வாறு அல்லாஹ் ஏற்படுத்திய)து ஏனெனில், வானங்களிலுள்ளதையும் பூமியிலுள்ளதையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான் என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும்.} (ஸூரா மாஇதா : 97).
۞ جَعَلَ ٱللَّهُ ٱلۡكَعۡبَةَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ قِيَٰمٗا لِّلنَّاسِ وَٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَٱلۡهَدۡيَ وَٱلۡقَلَٰٓئِدَۚ ذَٰلِكَ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ
{ஹஜ் செய்பவர்களுக்கு தண்ணீர் புகட்டுவதையும், புனித மஸ்ஜிதை பராமரிப்பதையும் - அல்லாஹ் இன்னும் இறுதி நாளை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் போர்புரிந்தவர் (உடைய செயலைப்) போன்று - நீங்கள் ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்விடம் (இவர்கள் இருவரும்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.} (ஸூரா தவ்பா : 19).
۞ أَجَعَلۡتُمۡ سِقَايَةَ ٱلۡحَآجِّ وَعِمَارَةَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ كَمَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَجَٰهَدَ فِي سَبِيلِ ٱللَّهِۚ لَا يَسۡتَوُۥنَ عِندَ ٱللَّهِۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
{இன்னும், ஹஜ்ஜுக்காக மக்களுக்கு (மத்தியில்) அறிவிப்(புச் செய்து அவர்களை அழைப்)பீராக! அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள். இன்னும் தூரமான பாதைகளிலிருந்து வருகின்ற மெலிந்த எல்லா (வகையான) வாகனத்தின் மீது (வாகனித்தவர்களாகவும் வருவார்கள்).} (ஸூரா ஹஜ் : 27).
وَأَذِّن فِي ٱلنَّاسِ بِٱلۡحَجِّ يَأۡتُوكَ رِجَالٗا وَعَلَىٰ كُلِّ ضَامِرٖ يَأۡتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٖ
{அவர்கள் தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும், (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்த கால்நடை பிராணிகள் மீது குறிப்பிட்ட (அந்த ஹஜ்ஜுடைய) நாட்களில் (அவற்றை அறுக்கும் போது) அல்லாஹ்வுடைய பெயரை நினைவு கூர்வதற்காகவும் (அவர்களை ஹஜ்ஜுக்கு அழைப்பீராக!) ஆக, (அல்லாஹ்விற்காக அறுக்கப்பட்ட) அவற்றிலிருந்து புசியுங்கள். இன்னும், வறியவருக்கும் ஏழைக்கும் (அவற்றிலிருந்து) உணவளியுங்கள்.} (ஸூரா ஹஜ் : 28).
لِّيَشۡهَدُواْ مَنَٰفِعَ لَهُمۡ وَيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ فِيٓ أَيَّامٖ مَّعۡلُومَٰتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۖ فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡبَآئِسَ ٱلۡفَقِيرَ
{பிறகு, அவர்கள் தங்களது (உடல்களில் இருந்து) அழுக்குகளை நீக்கிக் கொள்ளட்டும். இன்னும், தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டும். இன்னும், மிகப் பழமையான இறையாலத்தை அவர்கள் தவாஃப் செய்யட்டும்.} (ஸூரா ஹஜ் : 29).
ثُمَّ لۡيَقۡضُواْ تَفَثَهُمۡ وَلۡيُوفُواْ نُذُورَهُمۡ وَلۡيَطَّوَّفُواْ بِٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ
{(அல்லாஹ்வின் புனித அடையாளங்கள், குர்பானி பிராணிகள் ஆகிய) இவற்றில் குறிப்பிட்ட ஒரு காலம்வரை உங்களுக்கு பலன்கள் உள்ளன. பின்னர் அவற்றை அறுப்பதற்குரிய (ஹலாலான) இடம் அல் பைத்துல் அதீக் (-புனித எல்லை) ஆகும்.} (ஸூரா ஹஜ் : 33).
لَكُمۡ فِيهَا مَنَٰفِعُ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى ثُمَّ مَحِلُّهَآ إِلَى ٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ
{கொழுத்த ஒட்டகங்கள், (மற்றும் மாடுகள்,) அவற்றை உங்களுக்கு அல்லாஹ்வின் (மார்க்க) அடையாள சின்னங்களில் நாம் ஆக்கி இருக்கிறோம். அவற்றில் உங்களுக்கு நன்மைகள் உண்டு. ஆகவே, அவை (ஒரு கால் கட்டப்பட்டு, மூன்று கால்கள் மீது) நின்றவையாக இருக்க அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூ(றி அ)றுங்கள். ஆக, (அவை அறுக்கப்பட்ட பின்) அவற்றின் விலாக்கள் (பூமியில்) சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து சாப்பிடுங்கள்; இன்னும், யாசிப்பவருக்கும் எதிர்பார்த்து வருபவருக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இவ்வாறே அவற்றை (-கால்நடைகளை) உங்களுக்கு பணிய வைத்தோம்.} (ஸூரா ஹஜ் : 36).
وَٱلۡبُدۡنَ جَعَلۡنَٰهَا لَكُم مِّن شَعَٰٓئِرِ ٱللَّهِ لَكُمۡ فِيهَا خَيۡرٞۖ فَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا صَوَآفَّۖ فَإِذَا وَجَبَتۡ جُنُوبُهَا فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡقَانِعَ وَٱلۡمُعۡتَرَّۚ كَذَٰلِكَ سَخَّرۡنَٰهَا لَكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
{அவற்றின் இறைச்சிகள், அவற்றின் இரத்தங்கள் அல்லாஹ்வை அறவே அடையாது. எனினும், இறையச்சம்தான் உங்களிடமிருந்து அவனை அடையும். இவ்வாறுதான், அவன் அவற்றை (அந்த குர்பானி பிராணிகளை) உங்களுக்கு பணிய வைத்தான், அல்லாஹ்வை - அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக - நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக. இன்னும், (நபியே!) அல்லாஹ்விற்கு அழகிய முறையில் கீழ்ப்படிபவர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக!} (ஸூரா ஹஜ் : 37).
لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمۡ لِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡۗ وَبَشِّرِ ٱلۡمُحۡسِنِينَ