- வணக்கங்கள் யாவும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகவே அல்லாஹ்வை அவன் மார்க்கமாக விதித்ததன் அடிப்படையிலேயே வணங்குதல் வேண்டும். மாறாக புதுமைகள், நூதன அனுஷ்டானங்கள் மூலம் அவனை வணங்குதல் கூடாது.
- மார்க்கம் மனித கருத்தை வைத்தோ, மக்கள் நல்லதாகக் கருதுவதை வைத்தோ தீர்மானிக்கப் படமாட்டாது. மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றுவதன் மூலமே தீர்மானிக்கப்படுகிறது.
- இஸ்லாம் பரிபூரணமான மார்க்கமாகும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.
- பித்அத் என்பது அகீதா அல்லது சொல் மற்றும் செயல் சார்ந்த விடயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்திலோ, அவர்களின் தோழர்களின் காலத்திலோ இல்லாத மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தையும் குறிக்கும்.
- இந்த ஹதீஸ் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். அத்துடன் அமல்களை அளவிடும் அளவுகோளுமாகும். எந்த ஒரு அமலாக இருப்பினும் அவை அல்லாஹ்வுக்கென்ற தூய நோக்கமின்றி செய்யப்படுமாயின், அதனை செய்பவருக்கு எந்த கூலியும் கிடைக்காது. அதே போன்று அல்லாஹ்வின் தூதர் கொண்டு வந்ததற்கிணங்க எந்த செயலும் அமையப் பெறவில்லையாயின் அந்த செயல் ஏற்றுக் கொள்ளப்படாது நிராகரிக்கப்படும்.
- தடைசெய்யப்பட்ட நூதன அனுஷ்டானங்கள் என்பவை மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப் பட்டவற்றைக் குறிக்குமே தவிர உலகியல் சார்விடயங்களைக் குறிக்காது.