/ , உள்ளத்தினால் - தூய்மையான எண்ணத்துடன் 'உண்மையாக வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தான்' என்று கூறினார்கள்'...

, உள்ளத்தினால் - தூய்மையான எண்ணத்துடன் 'உண்மையாக வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தான்' என்று கூறினார்கள்'...

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்களிடம் நான் கேட்டபோது, 'அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேரார்வம்; எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிவிட்டு, 'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்தினால் - தூய்மையான எண்ணத்துடன் 'உண்மையாக வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தான்' என்று கூறினார்கள்'.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

மறுமை நாளில், மக்களில் நபியவர்களின் பரிந்துரைக்கு மிக தகுதியானவர் 'தனது உள்ளத்தினால் மிகத்தூய்மையான எண்ணத்துடன் லாஇலாஹ இல்லல்லாஹ் (உண்மையாக வணங்கப்படத் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,) என்று கூறுபவரே என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள். 'லாஇலாஹ இல்லல்லாஹ், என்பது (உண்மையாக வணங்கப்படத் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்ற கருத்தைக் குறிக்கும். அத்துடன் ஷிர்க் மற்றும் முகஸ்துதி ஆகியவற்றை விட்டு நீங்கியவராக இருத்தல் வேண்டும்.

Hadeeth benefits

  1. மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு பரிந்துரை உண்டு என்பதை உறுதிப்படுத்தல். அது தூய்மையான ஏகத்துவவாதிகளுக்கு மாத்திரமே உண்டு.
  2. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை (ஷபாஅத்) என்பது ஏகத்துவவாதிகளில் நரகத்திற்குரியோர் அதில் நுழையாது இருப்பதற்கும், நுழைந்தோர் அதிலிருந்து வெளிவருவதற்குமான முறையீட்டைக் குறிக்கும்.
  3. அல்லாஹ்வுக்கென்ற தூய்மையான உள்ளத்துடன் மொழிந்த ஏகத்துவ வார்த்தையின் சிறப்பும், அதன் பாரிய தாக்கமும்.
  4. திருக்கலிமாவை -ஏகத்துவ வார்த்தையை- உண்மைப்பத்துவதென்பது அதன் கருத்தை அறிந்து அதற்கேற்ப செயற்படுவதாகும்.
  5. அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பும், அறிவின் மீதான அவரின் பேரார்வமும்.