- ஷஹாதா கலிமாவின் (அதாவது உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வவைத் தவிர வேறுயாறும் இல்லை என சாட்சி கூறுதல்) என்பதன் கருத்தாவது அல்லாஹ்வை வணக்கவழிபாடுகளினூடாக ஏகத்துவப் படுத்துவதோடு அவனைத் தவிரவுள்ளவற்றை வணங்குவதை விட்டு விடுவதாகும்.
- முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என சாட்சிகூறுவதன் கருத்து 'அவரையும், அவர் கொண்டுவந்த விடயங்களையும் ஈமான் கொண்டு, உண்மைப்படுத்துவதோடு அவர் மனித குலத்திற்கான இறுதித் தூதர் என்பதையும் நம்பி ஏற்றுக்கொள்ளளுதல்.
- ஒரு அறிஞருடன் அல்லது மார்க்கத்தில் சந்தேகம் காணப்படும் ஒருவருடன் பேசுவது முட்டாள்களுடன் பேசுவது போன்றல்ல. இதனையே நபியவர்கள் முஆதைப் பார்த்து 'நீ வேதக்காரர்களிடம் செல்லவுள்ளீர்' என்ற கூற்றின் மூலம் உணர்த்தினார்கள்.
- சந்தேகம் கொண்டோரின் சந்தேகங்களிலிருந்து தப்புவதற்கு, மார்க்கம் குறித்த ஆழமான பார்வை ஒரு முஸ்லிமிடம் காணப்படுவது அவசியமாகும். இது கற்றலின் மூலமே சாத்தியமாகும்.
- அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தூதராக அனுப்பட்டதன் பின் யூத மற்றும் கிறிஸ்தவ மார்க்கங்கள் செல்லுபடியற்றவைகளாக மாறிவிட்டன. மறுமை நாளில் அவர்கள் வெற்றியாளர்களாக இருக்கவேண்டுமெனில் இஸ்லாம் மார்க்கத்தினை ஏற்று, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் ஈமான் கொள்ளுதல் வேண்டும்.