/ அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்'

அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்'

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு வார்த்தையை கூற அதற்கு நான் வேறு ஒன்றை கூறினேன். நபியவர்கள் 'அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்'. அப்போது நான் அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்காத நிலையில் மரணித்தவர் சுவர்க்கம் நுழைவார் என்று கூறினேன்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

அல்லாஹ்வுக்கென உரித்தான விடயங்களில் ஒன்றை பிற ஒன்றின் பால் யார் திருப்பி விடுகிறாறோ அதாவது அல்லாஹ் அல்லாதவரிடத்தில் பிரார்த்தித்தல், அல்லது உதவி கோரி வேண்டுதல் போன்ற விடயங்களை செய்த நிலையில் ஒருவர் மரணிப்பாராயின் அவர் நரக வாதிகளில் ஒருவராக கருதப்படுவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவரின் இறுதி முடிவு சுவர்க்கமாகும் என இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இத்தகவலுடன் மேலதிகமாக குறிப்பிடுகிறார்கள்.

Hadeeth benefits

  1. பிரார்த்தனை வணக்காமாகும் அதனை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் முன்வைப்பது கூடாது.
  2. தவ்ஹீத் -ஏகத்துவத்தின் -சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல். யார் ஏகத்துவத்தை ஏற்ற நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். அவர் தனது சில பாவங்களுக்கு தண்டிக்கப்பட்டாலும் சரியே!
  3. இணைவைத்தலின் அபாயம் குறிப்பிடப்பட்டிருத்தல், யார் அதில் மரணித்து விடுகிறாரோ அவர் நரகம் நுழைவார்.