- தவ்ஹீதின் -ஏகத்துவத்தின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல். அதாவது யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காது அல்லாஹ்வை உறுதியாக நம்பிய முஃமினாக மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்.
- இணைவைத்தலின் பயங்கர விளைவு. அதாவது அல்லாஹ்வுக்கு ஏதாவது ஒன்றை இணைவைத்த நிலையில் மரணித்தால் அவர் நரகம் நுழைவார்.
- அல்லாஹ்வை ஏற்றுவாழ்ந்த பாவிகளான ஏகத்துவாதிகளின் விவகாரம் அல்லாஹ்வின் நாட்டத்தின் பால் உள்ள ஒரு விடயமாகும். அல்லாஹ் நாடினால் அவர்களை தண்டிக்கவோ அல்லது அவர்களை மன்னிக்கவோ முடியும். ஆனால் இறுதியாக அவர்கள் செல்லுமிடம் சுவர்கமாகும்.