/ 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (இரகசியமான விடயம் குறித்த) வ...

'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (இரகசியமான விடயம் குறித்த) வ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக தாரிக் இப்னு அஷ்யம் அல்அஷ்ஜஈ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (இரகசியமான விடயம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது'.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

யார் தனது நாவினால் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' அதாவது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என மொழிந்து, அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் வணங்கத் தகுதியற்றவை என நிராகரித்து, ஏனைய மதங்களைத் தவிர்த்து இஸ்லாத்தை மாத்திரம் மார்க்கமாக ஏற்றுக்கொள்பவரின் உயிரும் உடமையும் முஸ்லிம்களுக்கு புனிதமாகும். அவனின் புறச்செயற்பாடுகளை மாத்திரமே கருத்திற் கொள்ள வேண்டும். எனவே அவனின் சொத்துக்களை பரிமுதல் செய்யவோ –அபகரிக்கவோ, அவனின் இரத்தத்தை ஓட்டவோ- கொலைசெய்யவோ முடியாது. ஆனால் இஸ்லாமிய சட்ட ஒழுங்குக்குட்பட்ட ஏதாவது ஒரு குற்றத்தை அல்லது பாவகாரியத்தை செய்துவிட்டால் அதற்கான தண்டனை நிறைவேற்றப்படும். மறுமை நாளில் அல்லாஹ் அவனை விசாரிப்பதை பொறுப்பேற்பான், அவன் உண்மையாளனாக இருந்தால் அதற்கு வெகுமதி வழங்குவதோடு, அவன் நயவஞ்சகனான இருந்தால் அவனிற்கு வேதனையளிப்பான்.

Hadeeth benefits

  1. 'லாஇலாஹ இல்லல்லாஹு' என மொழிவதும், அல்லாஹ்வைத் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் நிராகரிப்பதும் இஸ்லாத்தினுள் நுழைவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும்.
  2. 'லாஇலாஹ இல்லல்லாஹு' என்பதன் கருத்து அல்லாஹ்வைத் தவிர கற்சிலைகள், மண்ணறைகள் ஆகியவற்றை வணங்குவதை நிராகரித்து வணக்க வாழிபாடுகளில் அவனை ஓருமைப்படுத்தல்.
  3. யார் தவ்ஹீதை –ஏகத்துவக்கொள்கையை - ஏற்று அதன் வெளிப்படையான சட்டதிட்டங்களை கடைப்பிடித்தொழுகி நடந்து, அவனிடமிருந்து ஏகத்துவத்திற்கு முரணான விடயங்கள் வெளிப்படாத வரையில் அவனின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதை விட்டும் தடுப்பது கடமையாகும் .
  4. ஒரு முஸ்லிமின் உடமை, உயிர் புனிதமானது, தகுந்த காரணமின்றி அதற்கு சேதம் விளைவிக்க முடியாது.
  5. உலகில் வெளிப்படையான விடயங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பளித்தல் நடைபெறும். மறுமையில் எண்ணங்கள் நோக்கத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பளிக்கப்படும்.