- சிறியளவிலோ அல்லது அதிகமாகவோ நேர்வழியின் பால் அழைப்பதின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல். நல்வழியின்பால் அழைக்கும் அழைப்பாளருக்கு அதனைப் பின்பற்றி செயற்படுபவருக்குக் கிடைக்கும் கூலி உண்டு. இது அல்லாஹ்வின் மிகப்பெரும் அருட்கொடையாகும்.
- சிறியளவிலோ அல்லது அதிகமாகவோ வழிகேட்டின் பால் அழைப்பதன் ஆபத்து சுட்டிக்காட்டப்பட்டிருத்தல். அவ்வாறு வழிகாட்டுபவருக்கு குறித்த அந்த செயலை செய்பவருக்கு கிடைக்கும் பாவம் கிடைக்கும்.
- செயலின் தன்மைக்கேட்பவே கூலி உண்டு. யார் நன்மையான விடயங்களின் பால் வழிகாட்டுகிறாரோ அவருக்கு அதனை செய்பவருக்குக் கிடைக்கும் கூலி உண்டு. யார் தீமையான விடயங்களின் பால் வழிகாட்டுகிறாரோ அவருக்கு அந்த தீமையை செய்பவருக்குரிய கூலி உண்டு.
- ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் பகிரங்கமாக பாவங்கள் செய்வதை குறித்து எச்சரிக்கையாய் இருப்பது அவசியமாகும். காரணம் அதனைப் பின்பற்றி யார் அப்பாவ காரியங்களில் ஈடுபடுகின்றாரோ அவர் அப்பாவத்தை தூண்டாதிருப்பினும் அதற்குரிய பாவம் அவருக்கு கிடைக்கும்.