/ “அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்க...

“அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்க...

அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அன்நுஃமான் இப்னுல் பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த்தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களை தடுத்தால் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் வரம்புகளை பின்பற்றி அவனின் கட்டளைகளின் மீது உறுதியாக இருந்து நன்மையை ஏவி தீமையை தடுப்போருக்கும், அல்லாஹ்வின் வரம்புகளை துவம்சம் செய்து மீறி நடந்து, நன்மையான விடயங்களை விட்டுவிட்டு, தீமையான விடயங்களை செய்வோருக்குமான ஓர் உதாரணத்தையும், சமூகத்தின் மீட்சியில் அது எவ்வளவு தாக்கம் செலுத்துகிறது என்பதையும் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் இருசாராரும் கப்பலில் பயணம் செய்யும் ஒரு கூட்டத்திற்கு ஒப்பானவர்கள், அவர்களில் மேல்தளத்தில் இருப்போர் கீழ்த்தளத்தில் இருப்போர் யார் என்பதை அறிந்து கொள்ள சீட்டுக்குழுக்கப்பட்டது. அதன்படி அவர்களில் சிலருக்கு மேல்தளமும் சிலருக்கு கீழ் தளமும் கிடைத்தது.கீழ் தளத்தில் உள்ளோருக்கு நீர் தேவைப்பட்டால் மேள்தளத்தில் உள்ளோரை கடந்தே அவர்கள் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே கீழ்தளத்தில் இருந்தோர் நாம் இருக்கும் கீழ் தளத்தில் ஒரு துளையை இட்டுக்கொண்டால் அதனூடாக நீர் பெறலாம், அதனால் மேல் தளத்தில் உள்ளோருக்கு எங்களால் எந்தத் தொல்லையும் கிடையாது என்று கூறிக்கொண்டார்கள். கப்பலின் மேல்தளத்தில் உள்ளோர் இக்காரியத்தை செய்யுமாறு அவர்களை விட்டுவிட்டால் கப்பலுடன் சேர்ந்து அனைவரும் மூழ்கிவிடுவார்கள்.

Hadeeth benefits

  1. சமூகங்களைப் பாதுகாப்பதில் நன்மையை ஏவி தீமையை தடுப்பதன் முக்கியத்தும் இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருத்தல்.
  2. உதாரணங்கள்; கூறுவது கற்பித்தல் முறைகளில் ஒன்றாகும். அது புலன்கள் உணரும் விதத்தில் கருத்துக்களை புத்திக்கு நெருக்கமாக ஆக்கிவிடுகிறது.
  3. வெளிப்படையான தீங்கொன்றை செய்வதை கண்டிக்காது இருப்பதானது மிகப்பெரும் கேடாகும். அது அனைவரின் மீதும் மிகப்பெரும் பாதிப்பைப் பேரழிவைக் கொண்டு வந்து சேர்த்துவிடும்.
  4. இந்தப் பூமியில் தீமைசெய்வோரை அவர்களின்; அட்டகாசங்களில் விட்டுவிடுவதன் விளைவாக சமூகத்திற்கு நாசம்-அழிவு உண்டாகிறது.
  5. தவறான கையாள்கையும், நல்லெண்ணமும் செயல் சீர்பெற உதவாது.
  6. முஸ்லிம் சமூகத்தில் பொறுப்பு பொதுவானது. அது ஓரு குறிப்பிட்ட தனிநபரோடு மாத்திரம் சம்பந்தப்படாது.
  7. குறிப்பிட்ட சிலரின் பாவ காரியங்களை கண்டிக்காது விட்டால்; அதற்கான தண்டணையை அனைவரும் அனுபவிப்பவர்.
  8. நயவஞ்சகனைப் போன்று தீமைபுரிவோர் தங்களது தீமைகளை –சமூகத்திற்கு நன்மை செய்யும் வகையில் வெளிப்படுத்துவர்.