- தனது வாகனத்தில் தனக்குப்பின்னால் முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஏற்றிச்சென்ற நபி ஸல்லல்லாஹு அவர்களின் பணிவு பிரதிபளிக்கின்றமை.
- தான் கூறும் விடயத்தில்; கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பல தடவைகள் அழைத்ததின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்களின் கற்பித்தல் முறை தெளிவுபடுத்தப் பட்டுள்ளமை.
- 'லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்த்துர் ரஸுலுல்லாஹ்' என சான்று பகர்வதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, இந்தக் கலிமாவை கூறுபவர் உண்மையாளராகவும், பெய்யோ அல்லது சந்தேகமோ இன்றி உறுதியான நம்பிக்கையுடனும் கூறுபவராக இருத்தல் வேண்டும் என்பதைக் குறிப்பிடப்பட்டுள்ளமை.
- ஓரிறைக் கொள்கையுடன் மரணித்தவர்கள் நரகில் நிரந்தரமாக்கப்பட மாட்டார்கள். தாம் செய்த சில பாவங்களுக்காக அங்கு சென்றாலும் தூய்மையடைந்து மீண்டும் வெளியேறி விடுவார்கள்.
- இரு ஷஹாதாக் கலிமாக்களையும் உண்மையாக கூறியவரின் சிறப்பு கூறப்பட்டுள்ளமை.
- விபரீதம் ஏற்படும் என்ற நிலை இருந்தால் சில செய்திகளை சில நிலமைகளில் கூறாது இருந்து விடலாம்.