/ 'உங்களில் எவர் ஒரு தீங்கைக் காண்கிறாரோ அவர் அதைத் தனது கரத்தால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால் அதை அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர் தனது மனதால் வெறுக்கட்டும். இதுதான் நம்பிக்கையி...

'உங்களில் எவர் ஒரு தீங்கைக் காண்கிறாரோ அவர் அதைத் தனது கரத்தால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால் அதை அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர் தனது மனதால் வெறுக்கட்டும். இதுதான் நம்பிக்கையி...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் 'உங்களில் எவர் ஒரு தீங்கைக் காண்கிறாரோ அவர் அதைத் தனது கரத்தால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால் அதை அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர் தனது மனதால் வெறுக்கட்டும். இதுதான் நம்பிக்கையின் (ஈமானின்) மிகவும் பலவீனமான- தாழ்ந்த- நிலையாகும்.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொருவரினதும் இயலுமைக்கேட்ப- சக்திக்கு ஏற்ப- தீமையைத் தடுக்குமாறு இந்த ஹதீஸில் அறிவுருத்துகிறார்கள். ('அல் முன்கர்' என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடைசெய்த அனைத்து பாவகாரியங்கள் மற்றும் தீமைகளைக் குறிக்கும்) ஒருவர் தீமையை கண்டு அதனை தனது கையினால் தடுப்பதற்கான சக்தி பெற்றிருப்பின் –அல்லது அதிகாரத்தைப்பெற்றிருப்பின் - அவர் தனது கையால் தடுக்க வேண்டும். குறித்த தீமையை தடுப்பதற்கான இயலுமை அவரிடத்தில் காணப்படாவிட்டால்; தனது நாவினால் அப்பாவத்தை புரிபவரை தடுத்து அதன் விபரீதங்களை விளக்குவதுடன் தீமைக்குப் பதிலாக நன்மையின் பால் வழிகாட்ட வேண்டும் தனது நாவினால் குறித்த தீமையை தடுப்பதற்கு இயலவில்லையாயின் உள்ளத்தால் அத்தீமையை வெறுப்பதுடன் தனக்கு அத்தீமையை தடுப்பதற்கான பலம் கிடைத்தால் அதனை செய்வதாக மனதில் உறுதி கொள்ளல் வேணடும். தீமையை அல்லது பாவகாரியத்தை தடுப்பதில் ஆகக்குறைந்த நிலை மனதால் வெறுப்பதாகும்.

Hadeeth benefits

  1. பாவங்களை -தீமைகளை- தடுப்பதற்கான படித்தரங்களை விபரிப்பதில் அடிப்படையான ஒரு ஹதீஸாக இது உள்ளது.
  2. தீமைகளைத் தடுப்பதில் படிமுறைகளைப் பின்பற்றுமாறு இந்த ஹதீஸ் குறிப்பிடுவதுடன் இப்பணி ஒவ்வொரு மனிதனின் ஆற்றல் மற்றும் இயலுமைக்கு ஏற்பவே அமையும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.
  3. தீமையை தடுத்தல் மார்க்கத்தின் மகத்தான மற்றும் மிக முக்கிய ஒரு பகுதியாகும். ஆகையால் எவறும் இப்பொறுப்பிலிருந்து விலக முடியாது ஒவ்வொரு முஸ்லிமும் அவரவரவர் பெற்றிருக்கும் இயலுமைக்கேட்ப மேற்கொள்ளல் வேண்டும்.
  4. நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் ஈமானியப் பண்புகளில் ஒன்றாகும். ஈமான் கூடிக் குறையும் இயல்பைக் கொண்டதாகும்.
  5. குறிப்பிட்ட செயல் தீமை என்பதை அறிந்திருப்பது, தீமையைத் தடுத்தலுக்கான நிபந்தனையாகும்
  6. குறித்த ஒரு தீமையை தடுப்பதன் விளைவாக அதைவிடவும் மிகப்பெரும் தீமை உருவாகாது இருத்தல் வேண்டும் என்பது தீமையைத் தடுப்பதாற்கான இன்னொரு நிபந்தனையாகும்.
  7. தீமையைத் தடுப்பதற்கென சில ஒழுங்குகளும், நிபந்தனைகளும் உண்டு, அவற்றை ஒரு முஸ்லிம் கற்றுக்கொள்ளல் அவசியமாகும்.
  8. தீமையை தடுப்பதற்கு ஷரீஆ வழிமுறையும், அறிவும்,தெளிவும்அவசியமாகும்.
  9. மனதால்; தீமையை வெறுக்காதிருத்தல் ஈமானிய பலவீனமாகும்.