- அல்குர்ஆன் வசனங்களில் முஹ்கம் என்பது : கருத்தும் ஆதாரமும் தெளிவானவை. முதஷாபிஃ என்பது பல கருத்துக்களுக்கு இடம்பாடானவை. இதனை விளங்க அவதானம் மற்றும் புரிதல் போன்றன தேவைப்படும்
- வழிகேடர்கள் பித்அத்வாதிகள்,மக்களை வழிகெடுத்து சந்தேகங்களை ஏற்படுத்துவோரோடு சகவாசம் கொள்வதை விட்டு எச்சரித்தல்.
- இந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ் 'சிந்தனையுடையோரைத்தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள் என்று குறிப்பிடுவது தடம்புரண்டோரை மறைமுகமாக சாடுவதாகவும்,அறிவில் தேர்ச்சி பெற்றோரை புகழ்வதாகவும் உள்ளது. யார் சிந்தித்து படிப்பினை பெறாது மனோ இச்சையை பின்பற்றி நடக்கிறாரோ அவர் சிந்திக்கத்தெரிந்தோர் அல்ல என்பதே இதன் கருத்தாகும்.
- முதஷாபிகானவற்றை பின்பற்றுதல் உள்ளம் தடம்பிரழ்வதற்கான காரணமாகும்.
- புரிந்து கொள்வது அல்லது விளங்குவது சிரமம் என்றிருக்கும் முதஷாபிஹான வசனங்களை முஹ்கமான தெளிவான வசனங்களுடன் ஒப்பிட்டு தெளிவு பெறுவது கடமையாகும்.
- முஃமின்கள் மற்றும் வழிதவறியோரை வேறுபடுத்தும் முகமாக மக்களை சோதிப்பதற்காக அல்குர்ஆனில் சில வசனங்களை முஹ்கமாகவும் சிலதை முதஷாபிஹாஹவும் அல்லாஹ் வைத்துள்ளான்.
- ஏனையோரை விட அறிஞர்களின் சிறப்பை எடுத்துக்காட்டவும் பகுத்தறிவு குறையுடையது என்ற குறையை தெரியப்படுத்துவதும் அல்குர்ஆனில் முதஷாபிஹை வைத்திருப்பதன் நோக்கமாகும். இதன் மூலம் அறிவானது படைப்பாளனான அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டு அதன் இயலாமையை ஏற்றுக்கொள்கிறது.
- அறிவில் தேர்ச்சி பெறுவதன் சிறப்பும்,அதில் உறுதியாக இருப்பதன் அவசியமும்
- (வமா யஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு வர்ராஸிகூன பிஃல் இல்மி) இந்த வசனத்தில் அல்லாஹ் என்ற இடத்தில் நிறுத்தி ஓதினால் இந்த வசனத்திற்கு ' ரூஹ்(உயிர்) மறுமை நாள் போன்ற விவகாரங்களைப்போல் அதன் யதார்த்தமான விளக்கத்தை அல்லாஹ் மாத்திரமே பிரத்தியேகமாக அறிந்துள்ளான்.அறிவில் தேர்ச்சி பெற்றோர் அதனை ஈமான் கொண்டு அதன் யதார்தங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்து தங்களை அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வார்கள். இந்த வசனத்தை அல்லாஹ்' என்ற வார்த்தையில் நிறுத்தாது ஒதினால் வசனத்தில் இடம்பெற்ற தஃவீல் என்பதற்கு விளக்கம் தெளிவு பொருள் கொள்ளல் வேண்டும். இந்த அடிப்படையில் அல்லாஹ்வும் அறிவில் தேர்ச்சிபெற்றோரும் முதஷாபிஹாத் பற்றி அறிவார்கள் ஆனால் அறிவில் தேர்ச்சி பெற்றோர் முதஷாபிகான வசனத்தை முஹ்கமான வசனத்துடன் ஓப்நோக்கி தீர்வு காண்பர் என்பது இதன் விளக்கமாகும்.