- அனைவருக்கும் நலன் நாடுதல் வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளமை.
- மார்க்கத்தில் நலவை நாடுதலுக்குள்ள பாரிய இடம் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை.
- மார்க்கமானது நம்பிக்கைகள் சொல், செயல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளமை.
- யாருக்கு நலன் நாடுகிறோமோ அவருக்கு நன்மையே நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொள்வதும், நலன் நாடுபவருக்கு துரோகம் செய்தல் என்ற தீய குணத்திலிருந்து உள்ளம் தூய்மைபெற்றிருப்பதும் நலன் நாடலில் உள்ள விடயங்களில் ஒன்றாகும்.
- நபி (ஸல்) அவர்களின் அழகான கற்பித்தல் முறையை இங்கு அவதானிக்கலாம். ஒன்றைப் பொதுவாகக் கூறி விட்டு, பின்னர் அதனை விரிவாகக் கூறுகின்றார்கள்.
- மிக முக்கியமானதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். நபியவர்கள் முதலில் அல்லாஹ்வுக்கு நலவை நாடுவதைக் கூறிவிட்டு, அதன்பின் அல்குர்ஆன், அதன்பின் நபி (ஸல்) அவர்கள், அதன்பின் முஸ்லிம் தலைமைகள், அதன்பின் முஸ்லிம் பொதுமக்கள் என வரிசையாகக் கூறியுள்ளார்கள்.