- அல்லாஹ் தனது அடியார்களுக்கு விதித்துள்ள கடமைகளான அவனை மாத்திரம் வணங்கி வழிபட்டு, அவனுக்கு எதனையும் இணையாக்காது இருத்தல் என்பதனை தெளிவுபடுத்தல்.
- அல்லாஹ் தனக்கென அவனின் அளப்பரிய கொடையினால் அடியார்களுக்கு கட்டாயம் செய்யவேண்டும் என தன்மீது விதித்துக்கொண்ட கடமை பற்றிய தெளிவுபடுத்தியிருத்தல். அதாவது அல்லாஹ் அடியார்களுக்கு செய்யவேண்டியது அவனுக்கு இணைவைக்காது இருந்த அடியார்களை சுவர்க்கத்தில் நுழைவித்து, அவர்களை வேதனை செய்யாதிருப்பதாகும்.
- அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காத ஏகத்துவாதிகளுக்கு பெரும் நற்செய்தி இந்த ஹதீஸில் காணப்படுகிறது. அவர்களின் இறுதியாக .செல்லுமிடம் சுவர்க்கமாகும்
- முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவை மறைத்தல் என்ற குற்றத்திற்கு பயந்து தனது மரணத்திற்கு முன் இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.
- எந்த வணக்கவழிபாடோ, அல்லது ஷரீஆ குறிப்பிடும் தண்டனைகளோ அல்லது வரையறைகளோ அற்ற ஹதீஸ்களை மக்கள் விளங்கிகொள்ளமாட்டார்கள், அல்லது பிழையாக விளங்குவதற்கு இடமுன்டு எனும் அச்சம் இருந்தால் அவ்வாறான ஹதீஸ்களை பொதுவெளியில் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துதல்.
- அல்லாஹ்வை ஏற்றுவாழ்ந்த பாவிகளான ஏகத்துவாதிகளின் முடிவு அல்லாஹ்வின் நாட்டத்தின் பால் உள்ள ஒரு விடயமாகும். அல்லாஹ் நாடினால் அவர்களை தண்டிக்கவோ அல்லது அவர்களை மன்னிக்கவோ முடியும். ஆனால் இறுதியாக அவர்கள் செல்லுமிடம் சுவர்க்கமாகும்.