- இந்த ஹதீஸ் நபியவர்கள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நபித்துவ தீர்க்கதரிசனங்களுள் ஒன்றாகாக காணப்படுகிறது. நபியவர்கள் தனது சமூகத்தில் நடக்கவிருக்கும் விடயங்களை குறித்து அறிவித்துள்ளார்கள். அவை அவர்கள் அறிவித்தது போன்று நிகழும்.
- சோதனைக்குள்ளானவர் தன்னை தேற்றிக் கொள்வதற்காக அவருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கும் சோதனைக் குறித்து தீர்வைப்பெற பகிரங்கமாக கேட்பது அனுமதிக்கப்பட்டதாகும். அவ்வாறு சோதனை ஏற்பட்டால் நன்மையை எதிர்பார்த்தவராக பொறுமையாக இருத்தல் வேண்டும்.
- அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் கடைப்பிடித்தொழுகுவதே குழப்பங்கள் பிரச்சினைகளிலிந்து வெளியேறுவதற்கான- மீட்சிபெறுவதற்கான - ஒரே வழி.
- நன்மையான விடயங்களில் மாத்திரம் ஆட்சியாளர்களுக்கு கட்டுபட்டு அவர்களின் கட்டளைகளுக்கு செவிதாழ்த்தி நடக்கவும் அவர்களிடமிருந்து அநியாயம் நிகழ்ந்தாலும் அவர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்வது கூடாது எனவும் வலியுறுத்தியிருத்தல்.
- குழப்பகாரமான சோதனை நிறைந்த காலப்பகுதியில் ஸுன்னாவைப் பின்பற்றி நடப்பதுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்ளல்.
- ஆட்சியாளரிடமிருந்து அநியாயம் ஏதும் நிகழ்தாலும் ஒருவர் தன்மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
- பாதிப்பை ஏற்படுத்தும் இரு விடயங்களில் மிகவும் சாதாரணமானதை அல்லது தீங்கை ஏற்படுத்துவனவற்றில் இரண்டு விடயங்களில் மிக இலகுவானதை தேர்வு செய்தல் என்ற சட்டவாக்கவிதிக்கான ஆதாரம் இந்த ஹதீஸிலிருந்து பெறப்படுகிறது.