- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்னறிவுப்புச் செய்தமையும், அவர்கள் அறிவித்தது போன்று அவை நிகழ்ந்தமையும் அவர்களது நபித்துவத்தின் அற்புதங்களில் ஒன்றாகும்.
- தீமையை ஏற்று திருப்தியடைவதும் அதற்கு துணைபோவதும் தடுக்கப்பட்டுள்ளது. அதனை தடுப்பதும் கண்டிப்பதும் கடமையாகும்.
- பிரதிநிதிகள் மார்க்கத்திற்கு முரணான செயலை உருவாக்கினால் மக்கள் அதற்கு கட்டுப்படுவது கூடாது.
- முஸ்லிம் பிரதிநிதிகள் -ஆட்சியாளர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்வதன் விளைவாக குழப்பம், இரத்தம் சிந்துதல், பாதுகாப்பு அற்றுப்போதல் போன்ற நிலைகள் ஏற்படுவதால் கிளர்ச்சி செய்வது தடுக்கப்பட்டுள்ளது. எனவே பாவிகளான தலைவர்களது தீமைகளை சகித்துக் கொண்டு, அவர்களது துன்புறுத்தல்களைப் பார்த்து பொறுமை காப்பது சிறந்தது என மார்க்கம் கருதுகிறது.
- தொழுகை இஸ்லாத்தின் மிகப்பெரும் குறியீடாகும், அதுவே இஸ்லாத்தையும் நிராகரிப்பையும் வேறுபடுத்தக்கூடிய மிகப்பெரும் அடையாளம்.