- இந்த எச்சரிக்கையானது குறிப்பாக நாட்டின் தலைவர் (கலீபா) மற்றும் அவரின் அரச பிரதிநிதிகள் போன்றோரை மாத்திரம் குறிக்காது. மாறாக யாரெல்லாம் குடிமக்களின் விவகாரங்களில் பொறுப்புக்கூறக்கூடிய பதவி நிலைகளில் உள்ளனரோ அவர்கள் அனைவரையும் இது குறிக்கும்.
- எனவே முஸ்லிம் விவகாரங்களில் பொறுப்பொன்றை ஏற்ற யாவரும் அவர்களுக்கு நலன் நாடி, அவர்களின் அமானிதங்களை நிறைவேற்றுவதில் அயராது பாடுபட்டு அவர்களுக்கு துரோகம் மற்றும் மோசடி செய்வதிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதும் அவசியமாகும்.
- பொதுவான அல்லது குறிப்பான அல்லது, பெரிய அல்லது சிறிய நிர்வாகத்தை பொறுப்பேற்பதில் மிகப்பெரும் வகை கூறுதல் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப்படடுள்ளது.