- அல்லாஹ்விற்கு மாறு செய்யாத விடயங்களில் ஆட்சித் தலைமைகளுக்குக் கட்டுப்படுவது கடமையாகும்.
- ஆட்சித் தலைவருக்கு கட்டடுப்படுவதை விட்டும் விலகி முஸ்லிம் சமூகத்தின் கூட்டமைப்பை விட்டும் விலகியிருப்பது பற்றிய கடுமையான எச்சரிக்கை இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலையில் மரணித்தால் அறியாமைக் கால மக்களின் வழியிலேயே மரணித்தராகவே கருதப்படுவார்.
- கோத்திரவெறிக்காக போராடுவது இந்த ஹதீஸில் தடைசெய்யப்பட்டுள்ளமை.
- உடன்படிக்ககைள், ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது கடமையாகும்.
- தலைமைக்குக் கட்டுப்பட்டு, கூட்டமைப்புடன் சேர்ந்திருப்பதில் அதிக நன்மைகள் பாதுகாப்பு, நிம்மதி, சீரான நிலமை போன்றன கிடைக்கிறது.
- ஜாஹிலிய்யக்கால நிலைகளுக்கு ஒப்பான செயல்களை செய்வது தடைசெய்யப்பட்டிருத்தல்.
- முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் சேர்ந்திருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருத்தல்.