- எண்ணத்தில் தூய்மையை கடைப்பிடிக்க ஆர்வ மூட்டப்பட்டிருத்தல். ஏனெனில் அல்லாஹ்வின் திருமுகம் நாடி செய்யாத எந்த அமலும் ஏற்றுக்ககொள்ளப்படுவதில்லை.
- அல்லாஹ்வை நெருங்குவதற்கான அமல்களை –செயற்பாடுகளை- அடியான் அன்றாட செயற்பாடாகக் கருதி எவ்வித நோக்கமுமின்றி செய்தால் அதற்கான எந்த கூலியும் கிடையாது. எப்போது அந்த அமல்களை அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் செய்கிறானோ அப்போது அதற்குரிய கூலி கிடைக்கிறது.